Friday, Mar 5, 2021
HomeArticles Posted by கனலி (Page 40)

மஞ்சள் ரோஜாவில் தூங்குவதற்காகவே வந்தேன். போட்கிளப் பகுதியின் மூன்றாவது சாலையிலிருந்த அழகிய மாளிகைக்கு உள்ளே இருந்து, சுவர் ஏறி குதித்து, வெளியில் வந்து, ஓரமாக நிறுத்தியிருந்த என் வண்டியை

ஜன்னல் வழியாக திடீரென்று வீசிய காற்றே அவளுக்கு அவ்வெண்ணத்தை ஏற்படுத்தியது. வேலைகளை முடித்துவிட்டு மதிய சாப்பாட்டை அரைகுறையாய் சாப்பிட்டு அசதியாக அறைக்குள் வந்து ஜன்னல் ஓரமாக இருந்த

மடிநிறைய குட்டிகளைச் சுமக்கும் நிறைமாத கர்ப்பிணியாய் எதிர்ப்புக்களற்றுச் சுணங்கிக்கிடக்கிறது துணையிழந்த பேருந்து நிறுத்தம். கிழிந்து கிடக்கும் தார்ச்சாலை தன் அடிவயிற்றிலிருந்து உலர்ந்துபோன பால்மடியின் வாசத்தைப் பேரிரைச்சலோடு அலையும் கனரகக்காற்றில் கலந்து வீசுகிறது டிபன் கேரியர் வைக்கும் கூடையில் சாலைக்கும் பேருந்து நிலையத்திற்குமாய் அலைமோதும்

அவளது வியர்வைத் துளிகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன இந்த கடலை விட பெரிதாக இந்த கற்களை விட உறுதியாக சமயங்களில் அவள் உப்புக்கரிக்கும் வியர்வைகளை உற்பத்தி செய்கின்றாள் அவள் தனது நீராகாரத்தில் அதனைக் கொண்டே ருசியைக் கூட்டுகிறாள் அவளின் உதடுகள்

அண்மையில் நான் படித்தும் கேட்டும் தெரிந்து கொண்ட எழுத்தாளர்களில் என்னை மிகவும் பாதித்த ஒரு எழுத்தாளராக பவா செல்லத்துரை அவர்களை நான் காண்கின்றேன். எழுத்துகளின் ஒரு குறுகிய வட்டத்தினுள்

1 தைப்பனிக்குள் அசைந்தாடும் மாமரத்தை மேய்ந்துகொண்டிருக்கிறது மாடு சற்று தூரத்தில் சாரணத்தி வேர்களை கோணிப்பையில் சேமித்தவன் கல்லெடுத்து கிளையின்மீது எறிகிறான் அதிர்ந்து பார்த்த மாட்டின் கண்களில் செம்மஞ்சள் துவரை. சூரியன் உதிர்ந்த மாலையில் உரலைப் பின்னும் கயிறு பனிக்காலத்தில் வெடித்த மடிக்காம்புகளை நெய்யும்

தப்பித்தல் அனுமதியின்றி என் வீட்டில் சிலர் என் முன்னால் அமர்ந்து உறுத்து நோக்கும் விழிகளைக் காண முடியவில்லை யாரோ என்னை வெறிக்கின்றனர் அழைக்கின்றனர் கடக்கின்றனர் அவர்களுக்கு அழுகை என்று பெயர் சூட்டினேன் தப்பிக்க முயன்றால் எப்போதும்

நீங்குதல் எறும்புகள் பகல் கனவுகளை மொய்க்கின்றன பின் இழுத்துச் செல்கின்றன. தாரை தாரையாக உருகிக் கரிக்கின்ற உப்புத்துளிகளை காயங்களில் இருந்து குடைந்து எடுத்துச் செல்கின்றன மணல் புற்றுகளின் களஞ்சியங்களுக்கு குருத்தெலும்புகளை அரித்துக் கொண்டிருந்த வெறுமையின் உதிரத்தை மணந்து ஒன்றுக்கொன்று கனவுக்குள் சம்பாஷித்துக்

1. வெப்பம் பரவும் நெற்றியை விரல்கள் தேய்க்கின்றன. காதுகளில் வண்டொன்று சத்தமிடுகிறது. காலங்கள் கலைந்து தோன்றுகின்றன. கண்கள் நிறங்களைச் சுமக்க முடியாமல் கனக்கின்றன. மனநிலை குழம்புவதை உணரும் எப்போதும் சமாந்தரமாகக் காதற்பனியும் துாவுகிறது. அச்சத்தின் கதகதப்பைப் பற்றியபடி கள்மனம். மெய்யானவொன்றைத் தீரத்தீர அருந்தாததாக மறுகிய உடல். இடைவெளிகளை

புயலின் போது தான்‌ இந்த அடுக்ககம் தனது வயதை வெளிக்காட்ட தொடங்குகிறது. முதலில் எறும்புகள்: மீச்சிறிய கால்களும் சீனிக்குப்பசித்த வாயையும் தூக்கிக்கொண்டு உயிருள்ள கறுத்த கம்பளம் போல சுவர்