பரணி வாசம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலாளரான எழுத்தாளர் இரா.நாறும்பூநாதனின் சமீபத்திய நூல் ‘பரணி வாசம்’.

‘கனவில் உதிர்ந்த பூ, ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன், கண் முன்னே விரியும் கடல், ஒரு தொழிற்சங்க போராளியின் டைரிக் குறிப்புகள், ஸ்டேட் பாங்க் ஊழியர் டைரி 1 மற்றும் 2, கடன் எத்தனை வகைப்படும், இலை உதிர்வதைப் போல, யானைச் சொப்பனம், தட்டச்சுக் கால கனவுகள், ஒரு பாடல் ஒரு கதை நூல்களைத் தொடர்ந்து வெளிவந்திருக்கின்ற நூல் இது.

நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் மற்றும் சிறுகதை உள்ளிட்ட தொகுப்பு நூலான இது, கடந்த 18-09-2019 அன்று திருநெல்வேலியில் நடைபெற்ற அவரது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்நூல் வெளியிடப்பட்டது. நூலினை மணமகன் திலக் வெளியிட, எழுத்தாளர் உதயசங்கர் பெற்றுக் கொண்டார். திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட தாம்பூலப் பையில் இந்நூல் அன்பளிப்பாக இடம்பெற்றிருந்தது.


நூல்: பரணி வாசம்
எழுத்தாளர்: இரா.நாறும்பூநாதன்
பதிப்பகம்: ஆவாரம்பூ வெளியீடு
நூலைப் பெற:
தொடர்புக்கு: +91 9600501847

No comments

leave a comment

Share This