Homeநூல்கள் அறிவோம்கற்பனைகளால் நிறைந்தத் துளை

கற்பனைகளால் நிறைந்தத் துளை

எழுத்தாளர் அனுராதா ஆனந்தின் இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் ” கற்பனைகளால் நிறைந்தத் துளை ” .  ஏற்கனவே அவர் மொழி பெயர்த்த ” எண் 7 போல் வளைபவர்கள் ”  தமிழின் முக்கியமான  விருதான ” கவிஞர் .ஆத்மாநாம் அறக்கட்டளை ”  விருதை பெற்றிருந்தது.
மிக சரியான, சமகால ஆங்கில  கவிஞர்களின்  முக்கியமான கவிதைகளை தேர்வு செய்து மொழி பெயர்த்திருக்கிறார். தற்கால ஆங்கில கவிதைகளின் போக்கை கூர்மையாய் அவதானிக்காமல்  இந்த நூல் இவ்வளவு நுட்பமாக அமைந்திருக்காது. சமகால ஆங்கில கவிதைகளை அதன் சமகாலத்திலேயே மொழிபெயர்த்திருப்பது வரவேற்கத்தகுந்தது.  அருமையான வாசிப்பும், மொழிவளமும் கொண்டவர் என்பதால் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.  தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பு  கவிதை நூல் ” கற்பனைகளால் நிறைந்தத் துளை “

நூல்:  கற்பனைகளால் நிறைந்தத் துளை

எழுத்தாளர்: அனுராதா ஆனந்த்

பதிப்பகம்: சால்ட்

விற்பனை உரிமை: தமிழ்வெளி
விலை: ரூ 140
நூலைப் பெற:
தொடர்புக்கு: +91 90940 05600
பகிர்:
முந்தைய பதிவு
அடுத்த பதிவு
Latest comment
  • இந்த பகுதி மிகசிறபாக உள்ளது

leave a comment