Homeநூல்கள் அறிவோம்படுகைத் தழல்

படுகைத் தழல்

படுகைத் தழலை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இது ஒரு காலப் பயணம். 

காலத்தை பின்னோக்கி திரும்பி பார்க்கச் செய்யும் காலப் பயணம். வாசகனை எந்த இடத்திலும் குழப்பாமல் வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில், உண்மையின் பக்கம் நின்று புனையப்பட்ட தழல், இந்த படுகைத் தழல். 

சங்கத் தமிழ் பெயர்கொண்ட ஒவ்வொரு அத்தியாயத்தை முடிக்கையிலும் பூர்வக்குடியின் உழைப்பும் நிலமும் சுரண்டப்பட்டும் பிடுங்கப்பட்டும் ஆறா வடுவாக தீரா வலியாக காலந்தொட்டு கடந்தப்பட்டுக் கொண்டே வருவதை உணர நேர்கிறபோது படுகைத் தழல் கைகளை சுடுகிறது, விரல்களை முறிக்கிறது. 

மூதனும் மருதனும் வேம்பனும் வேம்படியானும் ராஐனும் கலியமூர்த்தியின் உடலில் நின்று பேசுகிறார்கள், காலத்தை கதைக்கிறார்கள். படுகைத் தழலின் இறுதியத்யாயத்தின் முடிவு என்னவாக இருக்குமோ என்கிற ஆவலும் எதிர்பார்ப்பும் வாசிப்பவரின் மனதை ஆக்கிரமிக்கும், இறுதியத்தியாம் நிச்சயம் வாசிப்போரை பிரம்மிக்கச்செய்யும். படுகைத் தழலை சுற்றியே நினைப்பிருக்கும், உறக்கத்தில் வேம்பனும் மூதனும் கங்கைராயனும் வருவர். வாசித்த பின்னால் புத்தகத்தை கீழே கிடத்துக்கிறபோது புத்தகத்திலிருந்து தானிய மணிகள் சிதறத் தொடங்கியிருக்கும். 


நூல்: படுகைத் தழல் (நாவல்)

எழுத்தாளர்: புலியூர் முருகேசன்

பதிப்பகம்: உயிர்மை

விலை: 160 ரூ

பகிர்:
No comments

leave a comment