Homeநூல்கள் அறிவோம்சித்திரங்களுக்கு அப்பால் படியும் நிழல்

சித்திரங்களுக்கு அப்பால் படியும் நிழல்

தன்னிலையில் தாங்கவொண்ணா வாதையின் குரல்களை பிரதியின் ஊடுபாவும் கவிதையாடல் இழைகளாகப் பின்னப்பட்டிருப்பவை ரா.த.ஜீவிதாவின் கவிதைகள். உரையாடல் அறுபட்ட அவலமும், பிறிதொரு உரையாடலுக்கான வேட்கையும் இணைந்து ஒலிப்பவையாக உள்ளன. அகத்தில் ஆழ்ந்துவிட்ட உணர்வுகளையும், அதாவது நினைவிலியின் வெளிப்பாட்டை மொழியூடாக வெளிக்கொணர்கையில் அத்தை புறக்கூறுகளின் வழியே அழித்துக்காட்டும் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

தானல்லாத மற்றொன்றினை முன்னிறுத்திப் பேசும் பண்பு ஜீவிதாவின் கவிதைகளில் நிரம்பி உள்ளது. இதை இன்னொருவர் அல்லது உரையாடலுக்கான மற்றொரு குரல் என உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

சிறுபத்திகளைக் கொண்ட கவிதைகளில் உணர்வின் சுழற்சியைக்காண முடிகிறது. ஒரு உடனடி ஆனந்தத்தைக் கவிதை பேசுகிறது. அது கவிதையின் வாசிப்புணர்வைத் தாண்டிய தொடுவுணர்வுபோல் செயலாற்றுகிறது. வாசிப்பவரின் உணர்நிலையை ஒரு கணம் தீண்டியதாக அறியமுடிகிறது. சொற்களின் பொருண்மை எல்லையை கவிச்செயல்பாடு விஸ்தரிக்கிறது. இவரது கவிதைகள் பொதுவாக ஒரு படிமத்தை அடுத்து வரும் படிமம் அழித்துக்கொண்டே செல்கிறது. அர்த்தம் உருவாக்கிச் சிதைப்பதின் பிரதிச் செயல்பாடு. ஒற்றை வரையறைக்குள் அடங்காத கவிதையாடலை முன்மொழிகிறது. காட்சிப்படிமம் கவிதையின் பருண்மையை அடைந்து பல கவிதைப்பிரதிகள் இயங்குகின்றன. இது இவருடைய எழுத்துமுறையின் தனிப்பண்பாக, அகவுணர்வையும்  X  காட்சிப் படிமங்களையும் அடுத்தடுத்ததாக வைக்கிறது.

-எஸ்.சண்முகம் சுப்ரமண்யம்


நூல் : சித்திரங்களுக்கு அப்பால் படியும் நிழல்           

ஆசிரியர் : ரா.த.ஜீவித்தா

வெளியீடு : குறி வெளியீடு

விலை : 90 ரூ

நூலைப் பெற :  8973541551

பகிர்:
No comments

leave a comment