Sunday, Nov 29, 2020
HomePosts Tagged "கவிதைகள்"

  காலம்         இங்கே   காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று  காலங்களுக்கு அப்பாலான  காலம்    இங்கே   இன்று பிறந்த இன்றும்  நாளை பிறக்கும் நாளையும்  பிறந்ததுமே   இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன    இங்கே   அன்றாடம் உதிக்கும் சூரியன்  முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது  முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது    இங்கே  காற்றில் எம்பும் புழுதிச்சுழலில்  யுகங்களுக்கு

கம்மா காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள் தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியது படகினுள் மிதக்கும்  சமுத்திரமென தெரிந்தது. தளும்பும் சமுத்திரக் குட்டியென்று எனது கையின் பதினோறாவது  குறுவிரல் வியப்பானது. பாளையை மாதிரியாக வைத்து சந்ததித் தொடர்ச்சியாய் வெட்டாத நகங்களால் சமுத்திரத்தின் குட்டியான  கம்மாவைத் தோண்டினேன். கருவாச்சி மடை கொடியறுக்காத

1.மாபெரும் அஸ்தமனம் அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன் ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்.. ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள்

1. உடைந்த கண்ணாடி ஒன்று உதவாப் பொருளாய் வீசப்பட்டது ஒரு மாடு அதை உற்றுப் பார்த்தது நாய் ஒன்று வந்து அதன் மீது மூச்சுவிட்டது மனநிலை பிறழ்ந்த ஒருத்தி அக்கண்ணாடியை எடுத்து அவளின் கந்தலாடையில் சுற்றிக்கொண்டாள் அதற்குப் பிறகு யாருக்கும் தெரியாது அந்தக் கண்ணாடிக்கு என்ன நேர்ந்ததென்று 2. ஒரு

விரவிக் கிடக்கும் சடைத்த மர நிழல்கள்… ரயில் தண்டவாளத்தை இரு கோடாக முதுகில் கீறிய அணில் குஞ்சு, என் சித்திரத்திலிருந்து தப்பித்த தும்பிகள் படபடக்கும் வண்ணாத்திப்பூச்சி,பொன் வண்டு வேலியோர தொட்டாச்சிணுங்கி. குப்பை மேனிச் செடி இணுங்கும் சாம்பல் பூனை… இறைந்துகிடக்கும் சருகு, நான்

1) வில்லிசைக்காரி இறந்து முப்பது கடந்தும் 'உன்னை ஒரு நாள் பார்க்க வருவேன்' என்ற அவளது குரலே கனவை நிறைக்கிறது. திண்ணையின் முக்கோணக் குழியைச் சுத்தப்படுத்தி கிளியாஞ்சட்டியில் நீரும் பருக்கையும் வைத்து தினமும் காத்திருப்பேன். மரத்தாலோ கல்லாலோ மண்ணாலோ வீசுகோல்களை செய்துவிடலாம். அவளது கரங்களை

சுல்தான் ஸைன் உல் அபீதின் அழிவை முன்னறிவித்த நட்சத்திரம் தோன்றி மறைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. வெள்ளம் கோபுரங்களை மூழ்கடித்தது, கூறப்பட்டதைப் போலவே இளநீர் கூடுகளுடன் மணிமகுடங்கள் மிதந்து செல்ல ஒன்றடுத்தொன்றாய் பால்பற்களென வீழ்ந்தன

வள்ளுவன் வழி வந்ததொரு பாணனின் அரசியல் பேச்சுக்கள் அல்லது மற்றமைகளுக்கான அறம் பேசும் குரல்களின் பரிணாம வளர்ச்சி [வெய்யிலின் இதுவரை வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்புகள் குறித்த உரையாடற்