[mkdf_section_title title_tag=”h2″ title=”கனலி குறித்து”]

Html code here! Replace this with any non empty text and that's it.

கனலி” இலக்கியம் கலை சூழலியல் இணையதளம். இணைய இதழாக கலை இலக்கியச் சூழலியல் தலைப்புகளில் படைப்புகளை வெளியிடும்.மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்புகளை வெளியிடும். மேலும் சிறார் இலக்கியப் பிரிவில் சிறார்களின் படைப்புகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் கலை இலக்கியப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறது. புதிய சிந்தனைகள் கருத்துகளோடு படைப்பாக்கங்களில் போதிய வல்லமையிருந்தும் கலை இலக்கிய உலகில் அறிமுகமாக இயலாத இளம் படைப்பாளிகளுக்கான களமாகவும் கனலி என்றென்றும் இருக்கும். கனலியின் முக்கிய நோக்கம்:  இணையதளத்தின் மூலமாக அயல் நாடுகளின் மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கும்.. தமிழ் மொழி படைப்புகளை  அயல் நாடுகளின் மொழிகளிலும் மொழிபெயர்ப்பு வாயிலாக அறிமுகப்படுத்தும்  இணைப்பு பாலமாக செயல்படுவதாகும்.   இணையதளம், சமூக வலைத்தளங்களையும் கடந்து பொதுவெளியில் கலை இலக்கிய நிகழ்வுகளை தகுந்த நேரத்திற்கு ஏற்றபடி முன்னெடுக்க விரும்புகிறது. கலை இலக்கிய ஆளுமைகளின் சிறப்புரைகளோடு இந்நிகழ்வுகள் தமிழகம் மற்றும் உலகம் எங்கும் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். கலை இலக்கிய உலகின் படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் ஆதரவு இல்லாமல் எந்த ஒரு முன்னெடுப்புகளும் சாத்தியமில்லை. எழுத்தாளர்கள், வாசக நண்பர்களின் அன்பும் ஆதரவும் கனலி கலை இலக்கிய இணையதளக்குழு தொடர்ந்து செயல்பட உந்துதலாக இருக்கும். நன்றி.