நிலுவை ஏமாற்றிட எண்ணமில்லை. நம்பிக்கொடுத்தவர் முன் நாணயம் அரூபமாய்ச் சுழன்று தள்ளாடுகிறது. தாமதம் வேண்டாம் என ரீங்காரமிடுகிறது இரவுப்பூச்சி. வாகனமில்லையே என்றதும் கால்கள் இருக்கிறதே என்கிறது. காலணி இல்லையே பாதங்களை விடச் சிறந்த காலணி ஏது. கால்களில் பெரு நோவு கைகள் இருக்கிறதே. கைகளால் எப்படி? சரி விடு சரீரத்தைப் பயன்படுத்து சாலையில் உருட்டு. • வட்ட வடிவப்பாதை விருப்பம் விருப்பமில்லை என்பதற்கெல்லாம் மாறாக முந்திச் செல்ல பின் சக்கரத்தால் எப்போதும்