கவிதைகள்

காணாமல் போவது எத்தனை வசீகரமானது.

தினம் தினம் எத்தனையோ பேர் காணாமல் போகிறார்கள் குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் மனநிலை சரியில்லாதவர்கள். காணவில்லை விளம்பரங்கள் செய்தித்தாள்களில் தொடர்ந்து வருகின்றன.   அவள் மட்டும் தொலைவதே  இல்லை எங்கு போனாலும் வழி தெரிந்து விடுவது கொடுந் துயரம். காணாமல் போகக்கூட ஆணாக வேண்டும்   தொலைவதற்கு முன்பான முன்னேற்பாடுகளின் பட்டியல் நெடுஞ்சிகை மழித்தல் காயம் முற்றும் மூடும் காவி ருத்ராட்ச மாலை திருவோடு அணங்கெனும் அடையாளம் அழிந்தோர் யாக்கை ஏதோவொரு...

சுஜா கவிதைகள்

வாழ்ந்தென்ன? தரையில் கையூன்றி எழுந்தவாறே எதிர்ச்சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கிறாள். மாலை நான்கு நல்ல நேரம்தான் யாருக்கும் அகாலத் தொந்தரவாகாத நேரம் வீடு திரும்பும்போது செய்தியாகக் காதை எட்டும். அள்ளி முடிந்து கொண்டையிட்டு வாசற்கதவைத் திறக்கிறாள். மேல்மாடிக்குச் சென்று குதித்துவிட்டால் அவ்வளவுதான் முடிந்தது. வழக்கம்போல் தடுக்கிவிடாமல் இருக்க சற்றே தூக்கிப் பிடித்தபடி படிக்கட்டில் கால்...

அழுகைக்கு மார்பை திருப்புதல்

இந்த வாழ்வில் என்ன இருக்கிறதென தேடினேன் என்னோடு ஒரு மருத்துவச்சியும் தேடினாள் அப்போதுதான் முதன்முறையாக சுடரைப் பெற்றெடுத்துக்கொண்டிருந்த பெண்ணுறுப்பை பார்த்தேன் அச்சு அசல் அது மாடத்தில் விளக்கெரிவதை ஒத்திருந்தது நெல்லிக்கட்டையூரிய இனிப்புக்கிணற்றின் தண்ணீரை கைகளில் அள்ளினேன் அதன் முதல் சுவாசம் பின்னப்பட்டது ஆகாசமயத்தோடு வலியும்...

உப்பளத்து கால்கள்

அவளது வியர்வைத் துளிகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன இந்த கடலை விட பெரிதாக இந்த கற்களை விட உறுதியாக சமயங்களில் அவள் உப்புக்கரிக்கும் வியர்வைகளை உற்பத்தி செய்கின்றாள் அவள் தனது நீராகாரத்தில் அதனைக் கொண்டே ருசியைக் கூட்டுகிறாள் அவளின் உதடுகள் வெடித்த பனிப்பாறையை நினைவூட்டுகின்றன அயற்சியால் தன்னிச்சையாக நாக்கு ஈரமாக்கிட பற்கள்...

செல்வசங்கரன் கவிதைகள்

பாவனை வெறும் விரல்களை வைத்து சிகரெட் குடிப்பது போல பாவனை செய்ய விரல்களும் என் பாவனைக்கு இணங்கி வாய் வரை வந்து போய்க்கொண்டிருந்தது. வாயைக் குவித்தால் தான் சிகரெட் பிடிக்கிறோமென்றே அர்த்தம். உள்ளே சொன்னேன். வெளியே வாய் வந்து குவிந்து...

ஸ்ரீநேசன் கவிதைகள்

  1.கவிதை ஆவது சொற்களில் சொற்சேர்க்கையில் அதுவாக்கும் கருத்தில் விரவிய அணியில் அலங்காரத்தில் ஓசை நயத்தில் சொற்களிடைவெளியில் அங்குக் கண்சிமிட்டும் மறைபொருளில் பொருள்மயக்கத்தில் தொனியில் வடிவத்தோற்றத்தில் கற்பனையில் சிந்தனையில் வாசகனில் அவன் கூர்ந்த வாசிப்பில் அவனும்...

செல்வசங்கரன் கவிதைகள்

லலிதா அக்கா எனக்குச் சின்ன வயதில் பக்கத்து வீட்டில்லலிதா அக்கா இருந்தார்எனக்குச் சின்ன வயதில் ரயிலில் மோதி அவர் இறந்து போனார்எனக்குச் சின்ன வயதில் அவருக்கு கவிதா மஞ்சு என இரண்டு மகள்கள்எனக்குச் சின்ன...

க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்

தலைகுப்புற விழுகின்ற எண்ணெய்க் குப்பியென்ன ஒளிவிளக்கா? விழுந்தணைந்தபின் குப்பென்று பற்றியடங்கும் உயிரென்ன மெல்லிய இருளா??!! நீர் தழும்பத் திரண்டிருக்கும் கண்களை செந்தாமரைகளென்கிறாய் இரு புருவங்களுக்கு மத்தியில் முழங்கு படிகத்தை வைத்தது போலிருக்கிறது விழிக்கோளங்கள் பாடும் கிண்ணங்களாக ஒலிக்கின்றன.... -க.சி.அம்பிகாவர்ஷினி

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

சுவிட்சுகளை மனனம் செய்தல் பறவையினங்களில் இந்த மின்விசிறிதான் அமானுஷ்ய குணம்கொண்டதுபோலும்  இரக்கம் கொண்டு ஒருநாள் அதைக் கூண்டிலிருந்து விடுவித்து  வானத்தில் மாட்டி வைத்தேன் இப்போது இந்நகரத்திற்கேயான மின்விசிறியென   கழுகொன்று சுழன்றுகொண்டிருக்கிறது  மேலும் விசிறியை இணைக்கும் மின்-வயர்களை  அது பாம்புகளென நினைத்துக்கொள்ள  இந்த அபத்தத்தை நிறுத்தவேண்டி அறையில் ஒவ்வொரு சுவிட்சாக  அமர்த்தி அமர்த்தி...

இறுதி அழிபாடுகளின் வரிசை-லீனா மணிமேகலை

அழிபாடுகளை எழுத மறுத்து கவிதை விடைபெறுகிறதுஎன எழுதிக் கொண்டிருக்கும் போதேமத்தேயுநாற்பத்தேழாவது மாடியிலிருந்து குதித்து விடுகிறான்வாக்குறுதிகளின் பாரம் ஒழிந்த காலமிதுதிரும்புதற்கென்று பாதைகள் இல்லாத வரைபடங்களை வைத்துக்கொண்டுகாதலை எப்படிக் கோருவது? புகைமூட்டங்களால் புலப்படாத நகரமொன்றின் சாலையில்போக்குவரத்து சமிக்ஞையில்...