மேரி ஆலிவர் கவிதைகள்
கற்களால் உணரயியலுமா?கற்களால் உணரயியலுமா?அவர்கள் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்களா?இல்லை அவர்களின் நிதானம் எல்லாவற்றையும்அமைதியடையச் செய்துவிடுமா?நான் கடற்கரையில் நடக்கும்போதுவெள்ளை நிறத்தில், கறுப்பில் எனப்பல வண்ணங்களில் சிலவற்றைச் சேகரிக்கிறேன்.கவலைப்பட வேண்டாம், நான் உன்னைத்திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறேன்பிறகு அவ்விதமே செய்கிறேன்.மரம் தனது பல கிளைகளைஉயர்த்தி உவகையடைகிறதே,ஒவ்வொரு கிளையும் ஒரு கவிதையைப்போலவா?முகில்கள் தங்களது மழைமூட்டையைஅவிழ்த்துவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றனவா?உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்,இல்லை, இல்லை, அது சாத்தியமேயில்லை என்று.நான் அத்தகைய முடிவைஎண்ணிப்பார்க்கவே மறுத்துவிட்டேன்.ஏனெனில் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும், மேலும் தவறாகவும்.**நான் கடற்கரைக்குச் சென்றேன்நான் காலையில் கடற்கரைக்குச் சென்றேன்நேரத்திற்கேற்ப அலைகள்வந்துபடியும் சென்றபடியும் இருந்தன,ஓ, நான் சோகமாக இருக்கிறேன்என்ன செய்யட்டும்—நான் என்ன செய்ய வேண்டும்? என்கிறேன்.தன் அழகிய குரலில் கடல் சொல்கிறது:மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கிறது.**எப்போது அது நிகழ்ந்தது?எப்போது அது நிகழ்ந்தது?“நிறையக் காலத்திற்கு முன்பு”எங்கு நிகழ்ந்தது?“தூராதி தூரத்தில்”இல்லை, சொல், எங்கு நிகழ்ந்தது?“எனது இதயத்தில்”இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது உனது இதயம்?“நினைத்துப்பார்த்த படியிருக்கிறது, நினைத்துப்பார்த்தபடியிருக்கிறது!”** இந்தக் காலையில் இந்தக் காலையில்செங்குருவிகளின் முட்டைகள்பொரிந்துவிட்டன மேலும் ஏலவே குஞ்சுகள்உணவுக்காகக் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன.அவர்களுக்குத் தெரியாது உணவுஎங்கிருந்து வருகிறது என்று,வெறுமனே கத்திக்கொண்டிருக்கிறார்கள் “மேலும்! மேலும்!”வேறு எது குறித்தும்,...
ஒரு தற்கொலைக்கு மிகச் சரியான நாள்
அந்த ஹோட்டலில் இருந்த 97 நியுயார்க் விளம்பரப் பிரதிநிதிகளும் தொலைதூர அழைப்புகளை முற்றுரிமையாக்கிக் கொண்டிருந்த விதத்தால், அறை 507-ல் இருந்த பெண், பிற்பகல் 2.30 வரை அவளது அழைப்புக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும்...
கதைகளால் செய்யப்பட்ட உலகம்: ம்யூரியல் ரூகெய்சரின் ‘இருளின் வேகம்’
இந்த உலகம் கதைகளால் செய்யப்பட்டிருக்கிறது,அணுக்களால் அல்ல.- ம்யூரியல் ரூகெய்சர் ('இருளின் வேகம்' கவிதையிலிருந்து).
Iயாரெல்லாம் பெண்குறிக் காம்பினை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்கள்யாரெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் யோனியை வெறுக்கிறார்கள்யாரெல்லாம் யோனியை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம்...
பிரமாண்ட வானொலிப் பெட்டி
ஒரு கல்லூரியின் பழைய மாணவர்கள் செய்தியறிக்கைளில் வரக்கூடிய சராசரி வருமானமும், முயற்சியும், மரியாதையுமுடையவர்களைப் போன்றவர்கள்தான் ஜிம்மும் ஐரீன் வெஸ்ட்காட்டும். திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கழிந்திருந்தன, இரண்டு குழந்தைகளுடன் ‘சுட்டன் ப்ளேஸ்’ அருகில் ஒரு...
கேப் காட் நுவார்: ஒரு விடுமுறையும் ஒரு புத்தகமும்
மகனைச் சந்தித்தோ விடுமுறை பயணம் மேற்கொண்டோ ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தடுப்பூசிச் சடங்குகளை முழுதாக செய்துமுடித்தது அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பதற்கான ஒரு மங்கலத் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பாஸ்டனில் எங்களுடன் சில...
அவனைப் பார்க்கச் செல்கிறேன்
“என்ன ஆச்சு?” அவள் கேட்டாள்.“எனக்குத் தெரியலை,” சிரிக்க முயன்றபடி சொன்னான். “நான் கொஞ்சம் சோர்வாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.”“நீங்கள் உங்கள் வேலையில் மிகக் கடினமாக உழைக்கிறீங்க” என்று சொன்னாள். “நான் உங்ககிட்ட பலமுறை...
ஒரு நீதிக்கதை
முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட...
டெட் கூசர் கவிதைகள்
பிறை நிலாஎவ்வளவு அது தன் முதுகில் சுமந்தே ஆகியிருக்க வேண்டும்,அந்த நீல நிழலான ஒரு மகத்தான பந்துஎன்றாலும் அது எப்படியோ பிரகாசிக்கிறது, ஒரு தோற்றத்தைத்தக்க வைத்துக் கொள்கிறது. இன்றிரவு பல மணி...
நான் ஒரு சிறிய நகரத்தை வாங்கினேன்
என்னவென்றால், டெக்சாஸில் இருக்கும் அந்த சிறிய நகரமான கெல்வெஸ்டனை நான் விலைக்கு வாங்கினேன். அனைவரிடமும், இங்கே ஒரு ராத்திரியில் எதையும் நான் மாற்றப்போவதில்லை, அனைத்தையும் மெதுவாக சாவகாசமாகத்தான் ஆற்றப்போகிறோம் ஆகவே உடனடியாக யாரும்...
“பத்து அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள்”
அமெரிக்க இலக்கியத்தைப் பற்றிப் பேசுமுன், Beecher சகோதரிகள் (பெண்கல்வி, அடிமை ஒழிப்பு குறித்து போராடியவர்கள்) Margaret Fuller (அமெரிக்காவின் முதல் பெண் போர்க்கள நிருபர்) Elizabeth Cady Standon (எழுத்தாளர், முதல் பெண்கள்...















