மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்

தஸ்தயேவ்ஸ்கியின் இறுதி நிமிடங்கள் -ஐமி தஸ்தயேவ்ஸ்கி

ஜனவரி இறுதியில் வேரா அத்தையும் அலெக்ஸாண்ட்ரியா அத்தையும் வீட்டிற்கு வந்தார்கள். வேரா அத்தை வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. அத்தை வீட்டுக்குத் தான் சென்றுவந்த ஏராளமான சந்தர்ப்பங்களும், தன் மனைவி...

மெய்யியலின் மதிப்பீடு-பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்,தமிழாக்கம்: விவேக் ராதாகிருஷ்ணன்

மெய்யியலின் சிக்கல்களை பற்றிய நமது சுருக்கமான மேற்பார்வை முடிவுக்கு வரும் நிலையில், மெய்யியலின் மதிப்பீடு என்ன, மற்றும் அதை ஏன் கட்டாயமாக படிக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. மெய்யியல் என்பது,...

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா தன்னுடைய தலைமைப் பொறுப்பை எப்படி இழந்தது? ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன்,தமிழில் –...

1970களிலும் 80களிலும் உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தலைமைப் பொறுப்பிலிருந்த இந்தியா இப்போது மோசமான ஒரு முன்னுதாரணமிக்க நாடாக மாறிவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கொண்டாடப்படும் இவ்வேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா...

பற்றி எரியும் கேள்வி: காலநிலை மாற்றத்தின் இலக்கியம் எங்கே?

காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தற்போது மொழியிலும், அதிகரிக்கும் வெப்பத்திலிருந்தும் உணரமுடிகிறது. கனடாவின் வடக்கு ஆர்க்டிக்கில் அமைந்துள்ள பாங்க்ஸ் தீவில் சுற்றுச்சூழல் மாற்றங்கள் வெகு வேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன; தங்களைச் சுற்றிக் காண்பவற்றை விவரிக்க...

கலைஞனின் கடமை குறித்து ஆல்பெர் காம்யு

 சமூகத்தின் அரசியலில் படைப்பார்வத்தின் பங்கினைக் கலைஞர்கள் சந்தேகிக்கக்கூடாது -ஆல்பெர் காம்யு (Albert Camus) கீழைதேசத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவர் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம்  அவரது தெய்வத்திடம் ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில் வாழ்வதிலிருந்து அவருக்கு விலக்களிக்குமாறு மன்றாடுவதை...

அறிவொளிர்தல் என்றால் என்ன?: கேள்விக்கு ஒரு பதில் இம்மானுவேல் காண்ட்,தமிழாக்கம்: விவேக் ராதாகிருஷ்ணன்

அறிவொளிர்தல் (Enlightenment) என்பது மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட முதிர்ச்சியற்ற நிலையிலிருந்து கிடைக்கும் மீட்பு. முதிர்ச்சியற்ற நிலை என்பது, மற்றவரின் வழிகாட்டுதல் இல்லாமல் தன் சொந்த அறிவாற்றலைப் பயன்படுத்த முடியாத ஒரு நிலை. இந்த...

குதிரை மீது வில்லியம் ஃபோல்க்னர்

மூலம்: ஹாவியேர் மரியாஸ் தமிழில்: சித்துராஜ் பொன்ராஜ் கொஞ்சம் ரசனை குறைந்த பழைய இலக்கியக் கதை ஒன்று வில்லியம் ஃபோல்க்னர் தனது As I Lay Dying நாவலை ஆறே வாரத்தில், நிலக்கரி சுரங்கத்தினுள்ளே இரவு ...

புத்தாயிரம் ஆண்டு – இலக்கியம் மற்றும் கலாச்சாரம் குறித்த ஐம்பது கூற்றுகள் – பால்...

இன்றைய நுகர்வு கலாச்சாரத்திற்கு மத்தியில், கலையிலக்கியமும் கலாச்சாரமும் என்ன அர்த்தம் கொள்கிறது? அதன் மதிப்பீடுகள் அடைந்திருக்கும் சரிவுகள் என்ன? அல்லது அவை என்னவாக பரிணாமம் கொண்டிருக்கின்றன? என்பது போன்ற கேள்விகளை நம்மை நாமே கேட்டு பரசீலித்துக்கொள்வதன் அவசியத்தைக்...

உண்மையின் இயல்பு : தாகூர்- ஐன்ஸ்டீன் உரையாடல்கள்

14/7/1930 அன்று மதியம், ரவீந்திரநாத் தாகூருக்கும்  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும், பின்னவரின் கஃபுத் இல்லத்தில் நடைபெற்ற உரையாடல்:   ஐன்ஸ்டீன்: நீங்கள் தெய்வீகம் என்பது உலகிலிருந்து தனித்து இருப்பதாக நம்புகிறீர்களா? தாகூர்:  தனித்தில்லை. எல்லையற்ற மனித ஆளுமை பிரபஞ்சத்தை...

என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு…

நான் பாதி உறக்கத்திலிருந்தபோது, வெளியில் விளையாடிய மகள் கயானோ, வீட்டிற்குள் வந்தது போல் இருந்தது. குளுமையான தன்னுடைய கன்னத்தை என் கன்னத்துடன் வைத்து அழுத்தி சிறிது நேரத்திற்குப் பிறகு, “ஆகா! அப்பா, எவ்வளவு...