தஸ்தயெவ்ஸ்கி 200-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ்

தஸ்தயெவ்ஸ்கியின் 200 வது ஆண்டை கொண்டாடும் வகையில் கனலி வெளியிட்ட தஸ்தயெவ்ஸ்கி 200-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ்.

ஃபாக்னர் தாஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கிறார் -தாத்தியானா மொரஷோவா

ஃபாக்னர் கவனிக்கத்தக்க அளவில் குறிப்பிட்டார்: “தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் அதிக அளவில் செல்வாக்கு செலுத்தியவர் மட்டுமல்ல, அவரை வாசிப்பதில் அதிக அளவு நான் மகிழ்ச்சியைப் பெற்றவன், இன்னும் ஒவ்வொரு வருடமும் நான் அவரை மீண்டும்...

நிலவறைக் குறிப்புகள் ஒரு பார்வை -தேனம்மை லெக்ஷ்மணன்

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் எல்லாப் படைப்புகளும் துயருறும் மனித ஆன்மாவினைப் பற்றியே பேசுகின்றன. இப்பூவுலகில் வாழ அதன் மனிதர்களோடு ஒத்திசைவோடு நடக்க அவரின் கதாபாத்திரங்கள் பெரும் பிரயத்தனம் செய்கிறார்கள். இயல்வாழ்விலும் மனதுக்குள் எப்போதும் ஒரு...

தஸ்தயேவ்ஸ்கியின் இறுதி நிமிடங்கள் -ஐமி தஸ்தயேவ்ஸ்கி

ஜனவரி இறுதியில் வேரா அத்தையும் அலெக்ஸாண்ட்ரியா அத்தையும் வீட்டிற்கு வந்தார்கள். வேரா அத்தை வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. அத்தை வீட்டுக்குத் தான் சென்றுவந்த ஏராளமான சந்தர்ப்பங்களும், தன் மனைவி...

தஸ்தயெவ்ஸ்கி – மனங்களின் வித்தகர்

’’உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவல் டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’என்று கூறப்பட்டாலும் கூட உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றி சொல்லி...

காதலெனும் தீராக் குருதிச்சுவை-தஸ்தாயெவ்ஸ்கியின் A Gentle spirit நெடுங்கதையை முன்வைத்து-சுரேஷ் பிரதீப்

ஒரு பழைய கதை. நாயொன்று வெகுநாட்களுக்கு முன்பே நீர்வற்றிப்போன ஆற்றின் நடுவே என்றோ இறந்த ஒரு மாட்டின் எலும்பைக் கண்டடைகிறது. ரத்தம் வற்றிப்போன அந்த எலும்பைப் பற்களுக்கு இடையே வைத்துக் கடிக்கிறது. எலும்பின்...

பலவீனமான இதயம் பற்றிய குறிப்புகள்-கோணங்கி

கீல் மையை அரைத்துப் பூசிய அமாவாசை இரவு. உருவங்கள் உருகி இதமிகு இருளில் மறைந்தன. மொட்டைமாடியில் உலாவிக் கொண்டிருந்தான். வீட்டுத் தென்னையிலிருந்து வளைந்த கீற்று சுவரில் உரசிக் கொண்டிருந்தது. அதன் உருவம் தெரியவில்லை. கீழே...

போபோக் (Bobok – ஒரு சிறிய பீன் வகை)- ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

“நீங்கள் ஏன் எப்போதும் துக்கமாகவே இருக்கிறீர்கள்? தயவுசெய்து சொல்லுங்களேன்.” என சிம்யோன் அர்டல்யொனோவிட்ச் நேற்று முன் தினம் திடீரென என்னிடம் வினவினார், வித்தியாசமான கேள்வி. அப்போது நான் கோவப்படவில்லை, நான் மிகவும் பயந்தவன்;  ஆனால்...

சூதாடி -காளிப்ரஸாத்

ஒரு மூன்றாம் மனிதனின் ஆர்வம் என்பது, எந்த ஒரு விஷயத்திலும் தவிர்க்க இயலாமல் உள் நுழைந்து, அதன் விளைவுகளைக் காண்பித்து விடக்கூடியவை. யோசித்துப் பார்த்தால், பாண்டவ கெளரவ குடும்பப் பிரச்சினையில் உள்நுழைந்து சூதாடிய...

மன்னிக்காதே நெல்லி! ‘ஜெயமோகன்’

நெல்லி, பரந்த பீட்டர்ஸ்பர்க் நகரின் தெருக்களில் பனி கொட்டும் இரவில், எதிர்பார்க்க ஏதுமின்றி, நிற்க நேரிட்ட சின்னஞ்சிறு ஜீவன். கடுங்குளிரில் நீல நரம்புகள் புடைத்து, அவளுடைய வெற்றுப் பாதங்கள் விறைத்துவிட்டிருந்தன. அவற்றை விடவும்...

 தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் -நம்பி கிருஷ்ணன்

Gabe: தால்ஸ்டாய் முழுச் சாப்பாடு. துர்கேனிவை உணவிற்குப் பின் அருந்தும் இனிப்பு, பழவகைகளாக நாம் பாவிக்கலாம். அவரது எழுத்தை நான் அப்படித்தான் வரையறுப்பேன். Rain: அப்போது தாஸ்தயெவ்ஸ்கி? Gabe: தாஸ்தயெவ்ஸ்கியிற்கு நாம் முழுச் சாப்பாட்டுடன் ஒரு...