தி.ஜா நூற்றாண்டுச் சிறப்பிதழ்

தி.ஜானகிராமன் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக கனலி வெளியிட்ட தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்.

தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்

சில நூல்களைப் பற்றிய நினைவு வரும்போது, அந்நூலுக்கு வேறொருவர் எழுதிய முன்னுரையும் சேர்ந்தே ஞாபகத்துக்கு வரும். புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்புக்கு ரா.ஸ்ரீ.தேசிகனின் முன்னுரையைப்போல. தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பான சிலிர்ப்புக்கு பிரபஞ்சன் எழுதிய...

”எனது எழுத்தின் திசையை தீர்மானித்தவன் தி.ஜானகிராமன்.“

   தி.ஜானகிராமனுக்கு இது நூற்றாண்டு.  இவ்வளவு காலங்கள் சென்ற பிறகும் அவர் நினைவு கூறத்தக்கவராயிருக்கிறார். இந்த நூற்றாண்டு மட்டுமல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அவர் நினைக்கப்படுபவர்தான். நூற்றாண்டு கண்ட பிறகும் அவர் மக்கள்...

ஜானகிராமன் பற்றி கரிச்சான்குஞ்சு

வைதீக ஆசாரமும், பழைய சம்பிரதாயங்களும் நிறைந்த, ஓரளவுக்கு அந்த வழியில் வாழ்வதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய குடும்பத்தில் பிறந்தவன் அவன். நானும். மன்னார்குடியில் இருந்த மஹோமஹோபாத்தியாயர் யக்ஞஸ்வாமி சாஸ்திரிகளிடம் சாஸ்திரம் வாசித்த சீடர்களில் மூவர்,...

தேவதரிசனம் -மொழிபெயர்ப்புச் சிறுகதை

ஹங்கா, ஸ்குப்னி மலையடிவாரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தாள்.  ‘கடைக்காரன் வீட்டு ஹங்கா’ என்று அவளை அழைப்பதுண்டு. கடைக்காரன் ஜாஹிக்கு விக்டா என்று ஒரு மகள் இருந்தாள். அவளுடைய பெண் ஹங்கா. ஹங்கா இப்பொழுது...

தி.ஜானகிராமனின் இலக்கியத் தேடல்

ஜானகிராமன் அமரராகி இன்னும் ஓராண்டு முடியவில்லை, வாசகர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முயற்சிக்கும் வேளையில் அவருடைய கடைசிப் படைப்பான நளபாகம் நூல்வடிவம் பெறுவது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக இலக்கிய...

தி.ஜா என்னும் செளந்தர்ய உபாசகர்

தஞ்சை மாவட்டத்தில் உறவினர் வீடுகளுக்குச் சென்று திரும்புகையில், வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று அலுத்துக்கொள்வது , “வெயில் கொளுத்துது” என்று சொல்வதுபோல் ஒரு அன்றாடம். ஒவ்வொரு வீட்டிலும், குட்டி என்றழைக்கபடும் சிறுமிகள் தமது...

மோகமுள்: ஒரு திருப்புமுனை

தொண்ணூறுகள் தொடக்கம். சுந்தர ராமசாமியைத் தொடர்ந்து சந்தித்து வந்தேன். ஜானகிராமன் பற்றிப் பேச்சு வந்தது. “ஜானகிராமன் படைப்பில் வெளிப்படும் மொழி, அவரோடு உரையாடும்போது நேர்ப்பேச்சில் உருவாகி வரவில்லை. காலத்திற்கும் அவருக்கும் இடைவெளியிருக்கிறது.  ஏமாற்றமாக...

“மரபு சார்ந்த கதாபாத்திரங்கள்“

தி.ஜானகிராமனின் மூன்று சிறுகதைகள்-ஒரு பார்வை     ஒரு கதையின் கதாபாத்திரங்கள் மௌனமாக, குறைவாக- மிகக் குறைவாகப் பேசி நகரும்போது, எதற்காக இப்படி  என்கிற புதிரோடேயே நாமும் தொடர்கிறோம். எப்பொழுதாவது பேசும்போது, என்ன சூட்சுமம் அதில் என்று...

மோகமுள் – சில சிந்தனைகள்

அமரர் தி.ஜானகிராமனின் மிகச்சிறந்த படைப்பு 'மோகமுள்' என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அது காலத்தை மீறிய காதல் கதை ஒன்றை சித்தரித்தது மட்டுமல்ல. அவர் எழுதிய வயதில்- தனக்கு பரிச்சயமுள்ள...

ஜானகிராமம்

உண்மையான தி.ஜானகிராமன் எங்குள்ளார் என்று கேள்வி எழுகிறது. உயிர்த்தேனிலோ, மலர்மஞ்சத்திலோ, மோகமுள் பாத்திரங்களிலோ, மரப்பசுவின் பக்கங்களிலோ, செம்பருத்தி, நளபாகம் கதைமாந்தர்களின் தோள்கள் மீதோ, அம்மா வந்தாளின் வரிகளிலோ எங்கும் இருக்கலாம். கம்பீரமாக உலவி...