சுருட்டை

ராட்சதப் பருந்து போன்ற பறங்கிப் போர்க்கப்பலிலிருந்து முதலாவது தீக்குண்டு ஒரு மாலையில் தான் முழங்கி வெடித்தது. மாடுகள் பாய்ந்து துள்ளி வாலைக் கிளப்பியபடி ம்மா எனக் கத்தியபடி ஓடின. ஆடுகள் ம்மே எனக் கூக்குரலிட்டன. ஆகாயத்திலிருந்து விண்மீனொன்று விழுந்து விட்டதென அதிர்ந்த நான் கையில் நாகியைத் தூக்கிக் கொண்டு காட்டின் திசையை நோக்கி ஓடினேன். காகங்களும் கொக்குகளும் வெளவால்களும் அலையலையென எழுந்து வானை நிறைத்தன. சிறகடிப்புகளின் உரசல்கள் தேகத்தை விதிர்க்கச் செய்தன. எண்ணற்ற சிறு பறவைகள் மரங்களின் கிளைகளிலிருந்து எழுந்து மிதந்தன. தீவுக்கு அப்பால் பருத்தித் தீவை நோக்கிப் பறந்தன. … Continue reading சுருட்டை