கனலி குறித்து

“கனலி” இலக்கியம்  கலை  சூழலியல் இம்மூன்று மையங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படும் ஆக்கங்களை வெளியிடும் இணையதளமாகும். இதுமட்டுமின்றி கனலி பதிப்பகம், வலையொலி மற்றும் வலையொளி போன்ற உறுப்புகளையும் கனலி கொண்டுள்ளது.
கனலியின் முக்கியமான நோக்கங்கள்:
நவீனத் தமிழிலக்கியம் என்கிற மாபெரும் வரலாற்றின் பக்கங்களில் மிகச்சிறிய உறுப்பாகத் தொடர்ந்து இயங்கி சீரிய இலக்கியப் பணிகளைத் தொய்வின்றிச் செய்வது.
தமிழர்களின் மொழி, கலை, பண்பாடு, வரலாறு, தொன்மம், நாட்டுப்புறவியல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து இவற்றுடன் தொடர்புடைய ஆக்கங்களை வெளியிடுவது.
சூழலியல், காலநிலை மாற்றங்கள் என்கிற நிரூபிக்கப்பட்ட அறிவியலை மையமாகக்கொண்டு எழுதப்படும் ஆக்கங்களை வெளியிடுவது, அதன் வழியாக வெகுஜன மக்களுக்கு இவற்றின் இன்றைய தேவை மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்துவது.
கலை – இலக்கியச் சூழலியல் ஆக்கங்களை அயல் மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கும், தமிழ் மொழிப் படைப்புகளை அயல் மொழிகளிலும் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிடுவது.
சிறார் இலக்கியத்தின் முக்கியத்துவம் கருதித் தொடர்ந்து அந்த வகைமைகளிலும் சிறார் இலக்கியப் படைப்புகளை வெளியிடுவது.
புதிய படைப்பாளிகளின் ஆக்கங்கள் என்றும் நவீன தமிழிலக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாகக் கனலி கருதுகிறது. அதனால் புதிய படைப்பாளிகளுக்கு வெளிச்சம் அளிக்கும் களமாகச் செயல்படுவது.
கனலியின் அச்சு இதழ், இணையதளத்தில் வெளியாகும் சிறப்பிதழ்கள், எழுத்தாளர்களின் புத்தகங்கள், சூழலியல் மற்றும் காலநிலை மாற்றங்களை மையமாகக்கொண்டு எழுதப்படும் புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் , சிறார் இலக்கியப் புத்தகங்கள் போன்ற அனைத்து வகைமையிலும் கனலி பதிப்பகம் வழியாக அச்சுப் புத்தகங்களாக வெளியிடுவது.
கனலி வலையொலி மற்றும் கனலி வலையொளி போன்றவற்றின் வழியாக நவீன இலக்கியத்தின் பக்கங்களை அறிமுகம் செய்து தொடர்ந்து இயங்குவது.
படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் ஆதரவு இல்லாமல் எந்த ஒரு முன்னெடுப்புகளும் என்றும் சாத்தியமில்லை. அதனால் தொடர்ந்து அத்தனை தரப்புகளுடன் இணக்கமாக இயங்கி நவீனத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு உதவுதல் கனலியின் மிகப்பெரிய லட்சியம். கனலி தொடர்ந்து இயங்கவும், கனலியின் கனவுகளுக்கும், லட்சியங்களுக்கும் உங்கள் ஆதரவை நல்குமாறு வேண்டுகிறோம்.
நன்றி.
அன்புடன்,
கனலி
தொடர்புக்கு
அலைபேசி எண் : 90800 43026,
மின்னஞ்சல் முகவரிகள்,
[email protected],
[email protected]