மதுசூதன் கவிதைகள்


முரண்களின் முள்வேலி.

ந்தப் பெரும் பாறையை
எப்படியெல்லாம் செதுக்கியிருக்கலாம் ?
இரண்யனைக் கிழித்த நரசிம்மனாக,
விம்மிய முலைகளோடு விளக்கேந்தும் சிலையாக,
ஒரு மலைக் கோயிலுக்கு முதலிரண்டு படியாக…
ஒன்றுமாகாததை யோசித்து என்ன வேலை ?
இப்போதைக்கு ஒரு காகம்,
ஓணான் குஞ்சைக் குத்திக் கிழிக்க அமர்ந்திருக்கிறது.

[ads_hr hr_style=”hr-fade”]

ஒரு மைத் துளியின் பிசிறுகள்.

வியப் போட்டியில்
மலையை வரையச் சொன்னார்கள்
ஒன்றில் மலை மட்டும்
இன்னொன்றில் மலையும் அருவியும்
மற்றதில் மலையும் மேகமும்
இருபதாவதில் மலையும் நதியும்.
தற்செயலாக கண்ணில் பட்டது
ஒரு குழந்தையின் வரையப்படாத காகிதம்.
அதிலிருந்த மலை அத்தனை அழகாயிருந்தது.

சரிந்த ஒற்றை மார்பு போலிருந்த
மலையின் உச்சியில்
புராதானக்கோட்டை.
சரிவின் படிகளில் ஏறி
ஒரு நீண்ட பெருமூச்சுடன் நிற்கிறேன்.
மன்னர் உப்பரிகையில்,
தளபதி போர் உடையில்,
ஈட்டிகளைத் தாங்கும் கேடயச்சத்தங்கள்.
பெருந்தூண்களில் செருகப்பட்ட எரிதழல்.
சற்றைக்கெல்லாம்
கடந்து போன வௌவால் இறந்த காலத்தையும்
நிகழ் காலத்தையும் கிழித்துப் பறக்கிறது.


மதுசூதன்

Previous articleசாகிப்கிரான் கவிதைகள்
Next articleவின்சென்ட் வான்கோவின் மஞ்சளும் வெண்கல மஞ்சளும்
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.