முகத்தில் சில்லென்று தண்ணீர் படவும் எரிச்சலுடன் கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தேன். அம்மா சுமந்துகொண்டு போன தண்ணீர்க் குடத்திலிருந்து தளும்பித் தரையில் வழிந்த நீர் சிதறி கன்னத்தில் தெறித்திருந்தது.
கவிஞர், விமர்சகர், கட்டுரையாளர், சிறுகதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என பன்முக இலக்கிய ஆளுமையாளராக இலக்கியத்தின் அனைத்து தளங்களிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் க.மோகனரங்கன். ஈரோடு மாநகரைச் சார்ந்தவர்.
1)அணுக்கம் எனது ஆயுள் பரியந்தம் நீந்தினாலும் கடக்கமுடியாத கடலுக்கு அப்பால் அக்கரையில் நிற்கிறாய் நீ நினைத்தால் நிமிடங்களில் நீர்மேல் நடந்துவந்து காணும்படிக்கு இதோ இக்கரையில்தான் இருக்கிறேன் நான். 2) பிராயம் அப்படியேதான் இருக்கிறாய் என்பது அம்மா எவ்வளவோ மாறிவிட்டேன் என்கிறாள் மனைவி தொட்டுப்பேசக் கூசுகிறான் வளர்ந்துவிட்ட மகன் நீயே பார்த்துக்கொள் என்று காதோர நரையைக் காட்டுகிறது கண்ணாடி இடுப்பிலிருந்து இறங்கப் பார்க்கும் கால்சட்டையை ஒரு கையால் இழுத்துப் பிடித்தபடி மறுகையால் பையில் உருளும் கண்ணாடி