Tag: இன்பா
இன்பா கவிதைகள்
1)நாடு மாறி நான்
சிவப்புக் காதோலை
கருப்பு வளையல்
ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய்
களக்கக் கட்டிய பூச்சரங்களென
பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக்
காவிரிக்கரையில்
முழு ஆடையோடு முழுகி
வெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டு
கரையேறும் கட்டுக்கழுத்திகள்
படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டி
மஞ்சள் தோய்த்தச் சரடைக்
கழுத்தில் கட்டி முடித்தபின்
முகூர்த்த மாலைகள் ஆற்றில்...