Tag: கதிர்பாரதி
டெல்டாவின் புதிய குரல்-கதிர்பாரதி கவிதைகள் குறித்து -கண்டராதித்தன்
செங்கதிர்ச்செல்வன் என்ற அழகிய பெயர்கொண்ட கதிர்பாரதியின் முதல் தொகுப்பு மெசியாவிற்கு மூன்று மச்சங்கள், அவரது முதல் தொகுப்பிலிருந்தே மிகுந்த கவனம் பெற்றவராகத் தமிழ்க் கவிதையுலகிற்கு அறிமுகமாகிறார். பின்னர் ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்...
அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது
30
கக்கடைசியில்
ஏர்வாடி தர்க்காவில்
அம்மாவைச் சேர்த்தோம்.
சங்கிலி பிணைத்து அழைத்துப்போகையில்
என் தலை தடவினாள்.
அப்போது கலைந்த முடியை
எத்துணை முறை சீவியும்
ஒழுங்குபடுத்த முடியவில்லை.
29
வெள்ளி அன்று
அம்மா பூண்டிருப்பது
மௌனமா
விரதமா
தனிமையா தெரியாது
அன்றைய மதிய உலை
கொதபுதா என்று கொதிய
வேடிக்கை பார்ப்பாள்.
28
அம்மாவின் காதோரச் சுருள்முடியிடம்
அப்பாவுக்கு இருந்த பயபக்தி
என்...