Wednesday, Aug 17, 2022

காதலில் விழுவது.

[நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டீன்பெக் எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அவரது மகன் தோம் உறைவிட பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தனது புதிய காதலைப் பற்றி தனது தந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். அந்தக் கடிதத்திற்கு ஜான் ஸ்டீன்பெக் எழுதியுள்ள பதில் கடிதம் காதலின் அழகை, மேன்மைகளை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. உலகப்புகழ் பெற்ற அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பு இது.]

 

நியூயார்க்
நவம்பர் 10,1958

ன்புள்ள தோம்:

உன் கடிதம் இன்று எங்கள் கைவசம் கிடைத்தது. நான் என் பார்வையிலிருந்து பதிலளிக்கிறேன் நிச்சயம் எலைன் அவள் பார்வையிலிருந்து எழுதுவாள்.

John steinback with his son

முதலில் நீ காதலிக்கிறாய் என்றால் அது நல்ல விஷயம். அது ஒருவருக்கு நடக்கும் மிகச்சிறந்த விஷயங்களில் ஒன்று. அதேநேரத்தில் யாரேனும் அதைச் சிறிய அல்லது எளிதான விஷயம் என்று உன்னிடம் வந்தால் அவர்களை அண்ட விடாதே.

இரண்டாவது – காதலில் பல வகை உண்டு. அதில் ஒன்று தற்பெருமைக்காக அன்பைப் பயன்படுத்தும், சுயநலமான, இரக்கமற்ற, இறுக்கிப்பிடிக்கும், ஆணவத்திமிர் கொண்டது. இது அசிங்கமானது மற்றும் பிரச்சனைகளைத் தரக்கூடியது.

இன்னொன்று உன்னிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வரும். அதனுள் கருணை, மரியாதை மற்றும் பழக்க வழக்கங்கள் உடன் இருக்கும்.
சமூக மரியாதை மட்டுமல்லாமல் மற்றொரு நபரை தனித்துவமான மற்றும் மதிப்புமிக்கதாக அங்கீகரிக்க வைக்கும். முதல் ஒன்று உன்னை நோயாளியாகவும்,எளிமையாகவும், பலவீனமாகவும் மாற்றும். ஆனால் இரண்டாவது வகை உன் வலிமையை வெளிக்கொண்டு வரும் மேலும் உனக்கே தெரியாமல் உன்னுள் இருக்கும் தைரியம், நற்குணம் மற்றும் நல்லறிவு போன்றவற்றையும் வெளியே கொண்டுவரும்.

இதை நீ பப்பி லவ்! இல்லை என்கிறாய். நிச்சயம், இது பப்பி லவ்! அல்ல.

நீ எப்படி உன்னுள் உணர்கிறாய் என்று என்னிடம் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். மற்ற யாரையும் விட உனக்கு மட்டும் அதைப்பற்றி அதிகம் தெரியும். நீ என்னிடம் கேட்கும் உதவி இதை நீ எப்படிக் கொண்டுபோகப் போகிறாய் என்பது தான். நான் நிச்சயம் அதைப்பற்றி உனக்குச் சொல்வேன்.

ஒரு விஷயத்திற்கு உள்ளே இருக்கும் மகிமைக்கு நன்றியுடன் உயர்வாக என்றும் இரு.

காதலின் குறிக்கோள் என்பது மிகச்சிறந்தது மற்றும் மிகவும் அழகானது. அதனால் அதனளவுக்கு வாழப் பழகிவிட வேண்டும்.

நீ ஒருவரை நேசிக்கிறாய் எனில் அவரிடம் அதைச் சொல்வது ஒன்றும் தீங்கானது இல்லை. சிலர் கூச்சப்படுகிறார்கள் என்பதையும் அவர்கள் சொல்வதிலும் இந்த கூச்சம் வருகிறது என்பதையும் நீ கருத்தில் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு நீ உணர்வதை அறிய அல்லது உணர ஒரு வழி இருக்கிறது ஆனால் அதை அவர்கள் எப்போதும் நம்மிடமே கேட்கவே விரும்புகிறார்கள்.

சில நேரங்களில் இது நடக்கும், நீ உணரும் விஷயங்கள் ஒரு காரணத்திற்காகவோ அல்லது இன்னொரு காரணத்திற்காகவோ திரும்பக் கிடைப்பதில்லை என்பது, ஆனால் இது உன் உணர்வைக் குறைந்த மதிப்புடையதாகவும் மற்றும் நல்லதாக என்றும் மாற்றி விடாது.

கடைசியாக, உன் காதல் உணர்வுகள் புரிகிறது ஏனெனில் அது என்னிடமும் இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் தற்போது அது உன்னிடமும் இருக்கிறது.

நாங்கள் சூசனை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அவள் மிகுந்த மகிழ்ச்சியாக வரவேற்கப்படுவாள். எலைன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வாள். ஏனென்றால் இவையனைத்தும் அவள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள். அவளும் இதற்குப் பெருமைப்படுவாள். அவளுக்கும் காதலைப் பற்றி அதிகம் தெரியும் அதனால் இந்த விஷயத்தில் என்னை விட அவள் உனக்கு அதிகம் உதவுவாள்.

மேலும் இழப்பதைப் பற்றி என்றும் கவலைப்படாதே. அது சரியாக இருந்தால், அது இயல்பாகவே நடக்கும்.

முக்கியமான விஷயம் அவசரப்படக்கூடாது.

நல்லது எதுவும் நம்மை விட்டு அவ்வளவு எளிதில் விலகாது.

காதலுடன்
ஃபா

 

தமிழில் : க.விக்னேஸ்வரன்

பகிர்:
previous article
next article
No comments

leave a comment

error: Content is protected !!