நாம் காலநிலை நெருக்கடியின் ஆறு தசாப்த (அறுபது ஆண்டுகள்) சுழற்சியின் பாதிவழியை கடந்துள்ளதை துல்லியமாக காண முடியும். இதன் முக்கியமான ஆண்டுகளின் சித்திரம்போல் புலர்கிறது இப்புத்தாண்டு விடியல்.
புவி வெப்பமாதல் 1990 வாக்கில் இருந்துதான் ஒரு பொதுப் பிரச்சினையாக உள்ளது. அறிவியலாளர்கள் இதற்குப் தசாப்தங்கள் முன்பிருந்தே இதில் ஆராய்ந்திருக்கிறார்கள்; எண்ணெய் நிறுவனங்களும் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் காலநிலையில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய ஆய்வை செய்துகொண்டிருந்தார்கள் என்பதை நாம் இப்போது அறிவோம். ஆனால் 1988-ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஹன்சென் காங்கிரஸில் (அமெரிக்க நாடாளுமன்றம்) அறிவித்ததன் மூலம் இந்தச் சிக்கல் பொதுவெளிக்கு வந்தது. 1992-ஆம் ஆண்டு நடந்த ‘ரியோ புவி உச்சிமாநாடு’ தான் இந்தப் பிரச்சனையை நிறுத்துவது குறித்து சர்வதேச அளவிலான பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியது. தற்போதிலிருந்து 2050-ஆம் ஆண்டுக்குள் கார்பனற்ற நிலையை உருவாக்கும் விதமாக உலகின் பல நாடுகள் ஒருமித்த இலக்கு நிர்ணயித்துள்ளன. காலநிலை நெருக்கடி முடிவுக்கு வரும் அந்த நாள் குறித்துவைக்கப் படவில்லை. ஆனால் இது புவியின் ஆற்றலைக் கட்டுப்படுத்தவும், புதிய பொருளாதார மாற்றத்திற்கான காலக்கெடுவை இறுதிசெய்யவும் உதவும். ஆக, மூன்று தசாப்தங்கள் முடிந்தும், மூன்றை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறோம்.
அந்த மூன்று தசாப்தங்களில், நாம் மிக முக்கியமான இரண்டில் ஒன்றுக்கு வந்ததடைந்ததுடன், தற்போது மற்றொன்றில் நுழைகிறோம். இதில் முக்கியமாக வீணாகிப் போனவை 1990-களும் 2000 ஒட்டிய ஆண்டுகளும்தான்: எண்ணெய் நிறுவனங்களின் பிரச்சாரமும் அரசியல் பலமும் இருந்தமையால், இதன்மீதான நடவடிக்கை சாத்தியமற்றதாக்கியது. 2009-ஆம் ஆண்டு நடந்த கோபன்ஹேகன் காலநிலை மாநாடு அடைந்த வரலாற்றுத் தோல்வியோடு அந்த சகாப்தம் முற்றுபெற்றது.
ஆனால், அதே வேளையில் மூன்று போக்குகள் தீவிரம் பெறத் தொடங்கின. முதலாவதாக, உலகம் முழுவதும் வெப்பம் அதிகரிப்பின் விளைவுகளை நம்மால் காண முடிந்தது; அடிக்கடி ஏற்படும் தீ, வெள்ளம், புயல் போன்ற சீற்றங்கள் தீவிரமாக இருந்ததால், அவை மறுக்கமுடியாத நிலையை எட்டின. இரண்டாவதாக, புதுப்பிக்கப்பட்ட ஆற்றலின் திறன் வேகமாகக் குறைந்ததால், பரந்த அளவில் சூரிய மற்றும் காற்று ஆற்றலின் விலை சரிந்தது. மூன்றாவதாக, உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் எழுச்சி பெற்ற நிலையில் அரசியல்வாதிகள் சிலரைத் தவிர எண்ணெய் நிறுவன தொழிலதிபர்களையும் அச்சமுறச் செய்தன; அவர்களால் கோபுன்ஹேகனில் இருந்து திரும்பியதைப் போல், பாரிஸில் இருந்து ஒன்றுமில்லாமல் திரும்ப முடியவில்லை. காலநிலை போராட்டம் ஒரு புதிய நிலைக்கு வந்தது, பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரித்ததால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் உறுதியானது. மேலும் செல்லும் பாதையில் பெரும் பள்ளமாக இருந்தார் டொனால்டு டிரம்ப். இதன் வேகத்தை அவரால் குறைக்க முடிந்ததே அன்றி நிறுத்த முடியவில்லை.
நாம் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பொருளாதாரத்தை விடவும் கூடுதல் வேகம் வெற்றிக்கும் அரசியல்வாதிகளை விடவும் கூடுதல் வேகம் வசதிக்கும் வழிவகுக்கும். ஏனென்றால் கடந்த தசாப்தத்தில் இருந்ததை காட்டிலும் தற்போது கவனமாக செயல்படுவது அவசியம். இது காலநிலை மாற்ற பரிசோதனைக்கான நேரம் என்பதை மறந்துவிட வேண்டாம்; இந்த தசாப்தம் அதிகரித்து வரும் உமிழ்வுப் பாதையை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கை எடுப்பதற்கு சிறந்தது. இதனால்தான் தற்போதும் 2030-ம் ஆண்டுக்கு இடையே மாற்றம் நிகழ்வது நிச்சயமென்று காலநிலை விஞ்ஞானிகள் கூறுகின்றனர்: இதில் உமிழ்வு குறைந்தபட்சம் பாதியாக குறைவது நிச்சயம். நாம் 2030-ம் ஆண்டு முதல் 2050-ம் ஆண்டு வரையிலான காலகட்டம் குறித்து சிந்திக்க வேண்டும்: இதேபோன்ற நிலை அடுத்த ஒன்பது ஆண்டுகளில் வலுவாக வேண்டும். நடைமுறையில் நாம் செய்ய வேண்டியது என்ன?
- புதிய வீடுகளுக்கும் தொழில்களுக்கும் தரப்படும் இயற்கை வாயு இணைப்புகள், கனடாவின் தார் மணலில் இருக்கும் பூதாகரமான குழாய் இணைப்புகள் போன்ற புதைபடிம எரிபொருள் உள்கட்டமைப்புகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
- உலகம் முழுவதுமுள்ள கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்வதன் மூலம் வலிமையாகவும் முழுமையாக மின்மயமாகவும் உருவாக்கலாம். இதனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் அபரிமிதமான பலனைப் பெறலாம்.
- நமக்காகவும் நமது உடைமைகளுக்காகவும் உலகம் முழுவதிலும் ஒர் மாபெரும் மாற்றத்தை உருவாக்கவேண்டும். ஹைட்ரோகார்பனுக்கு மாற்றாக மின்சாரத்தையும் மனித ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும்.
- காடழிப்புக்கு ஒரு முடிவு கட்டவேண்டும். உணவு உற்பத்தியில் கார்பனை வெளியேற்றுவதற்கு பதிலாக, கிரகிக்கவைப்பதற்கான வழிகளை மேம்படுத்தவும் விரைவான ஆராய்ச்சிகளைத் தொடங்க வேண்டும்.
- பொறுப்பற்ற முறையில் இயங்கும் புதைபடிம எரிபொருள் நிறுவனங்களின் பணப்புழக்கத்தை நிறுத்தவேண்டும்.
இவை அனைத்து இடங்களிலும் நடக்க வேண்டும்; ஒரு சில நாடுகளில் மட்டும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பலனில்லை. காலநிலை மாற்றத்தால் பாதிக்கபட்டுள்ள உலகம், இன்னும் மோசமான நிலையை எட்டிவிடாதிருக்க, இவை அனைத்தும் பின்னணியிலும் முன்னிலையிலும் செயல்படுத்தப்படவேண்டும். தேவையானவற்றை செய்வதென்பது உடல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சாத்தியமே. (இந்த மாற்றத்துக்கான செலவை, ஆண்டுதோறும் நமக்கு குறையக்கூடிய எரிபொருள் செலவின் மூலம் ஈடுகட்ட முடியும்)
ஆனால், செயலின்மையையும் சுயலாபத்தையும் வெல்வதுதான் வழக்கம் போல, சூட்சுமம். காலத்தோடு பழகிவிட்டால் அதுவும் எளிதாகும். ஒரு தசாப்தத்துக்கு முன் இருந்தது போல், தற்போது எக்ஸான்மொபில் நிறுவனம் பெரிதாக இல்லை. மேலும் புதிய மின் மகிழுந்து ஒவ்வொன்றும் அதன் சக்தியை இன்னும் கொஞ்சம் குறைப்பதாக உள்ளது. இதேபோல் சரியான விஷயங்களை சொல்லும் போக்கு உலக அரசாங்கங்களிடம் அதிகரிக்கிறது. ஆனால் முடுக்கத்துடன் முன்னேறுவதற்கு கடந்த தசாப்தத்தின் பலங்களான பொறியியல் வெற்றியும், கட்டுமான எழுச்சியும் அவற்றுக்குத் தேவைப்படுகின்றன. இந்தக் கதை எப்படிப் போகும் என்பதை இன்று உயிரோடு இருக்கும் பலரும் பார்ப்பார்கள். ஒரு தசாப்தம் என்பது நூற்றிருபது மாதங்கள். கிட்டத்தட்ட ஐநூறு வாரங்கள். அவ்வளவுதான் நமக்கிருக்கும் நேரம்.
பில் மெக்கிபென் – சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், இதழாளர். 350.org என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர்.
தமிழில் ச.ச. சிவசங்கர்