1. நன்கறீவீர் நீங்கள் இந்தப் பாவலனிடம் ஒன்றுமில்லை ஓர் ஒற்றை ஆடையைத் தவிர அதுவும்கூட இருதுணிகளால் ஒட்டுப்போட்டத் தையல்தடத்துடன் காதலும் அப்படியே! 2. என்னுள் எரியும் எது உள்ளத்தின் பெருந்துயரையும், பேரின்பத்தையும் அது உண்டாக்குகிறது ? உன் காதல் இசைக்குறிப்பைத் தாளமிடுகிறது என்
இந்தப் பறவைக்கு இந்த மலை புதிது சமவெளியில் அதற்கென இருந்த காடு மரங்களை அகற்றிய பிறகு எரியூட்டப்பட்டதும் பழகியிராத மலை நோக்கி உயரப் பறந்தது இறகுகள் ஒத்துழைக்கவில்லை மலையின் காலடியில் தனித்து நின்றது. —— இரண்டு பாறைகளை