தலைகுப்புற விழுகின்ற எண்ணெய்க் குப்பியென்ன ஒளிவிளக்கா?
விழுந்தணைந்தபின்
குப்பென்று பற்றியடங்கும்
உயிரென்ன மெல்லிய இருளா??!!
நீர் தழும்பத் திரண்டிருக்கும் கண்களை
செந்தாமரைகளென்கிறாய்
இரு புருவங்களுக்கு மத்தியில்
முழங்கு படிகத்தை வைத்தது போலிருக்கிறது
விழிக்கோளங்கள்
பாடும் கிண்ணங்களாக ஒலிக்கின்றன….
-க.சி.அம்பிகாவர்ஷினி
இந்தக் கவிதைகளின் படிம subtilities…
வியக்கிறேன்!