றாம் சந்தோஷ் வடார்க்காடு

றாம் சந்தோஷ் வடார்க்காடு
1 POSTS 0 COMMENTS
றாம் சந்தோஷ் வடார்க்காடு (1993) இயற்பெயர் சண்முக. விமல் குமார். தொல்காப்பியக் கோட்பாடுகள் சார்ந்த ஆய்வுகளில் தொடர்ந்து இயங்கி வருகின்ற  தமிழ்த்துறை ஆய்வாளர். தனது இரண்டு பெயர்களில் மட்டுமல்லாது, வேறு சில பெயர்களிலும் எழுதிவரும் இவர், வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரத்தில் பிறந்தவர். தற்போது ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். கவிதை, கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு வகைமைகளையும் தயக்கமின்றி முயற்சித்து வரும் றாம், ஓவியர்கள் நடேஷ், திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் ஆகியோரின் ஓவியத் தொகுப்பாக்கங்களிலும் பங்காற்றியவர்; மணற்சிற்பங்களையும் செய்து வருகிறார்.   முதல் கவிதைத் தொகுப்பிற்காக ‘ஆத்மாநாம்’ விருது (2020) அறிவிக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டவர். ஆய்வுப் பணிகளுக்காகப் பேரா.பா.ரா. சுப்பிரமணியன் பெயரிலான ’இளம் ஆய்வறிஞர் விருதி’னையும் (2022) பெற்றவர். இவருடைய முதல், இரண்டாவது கவிதைத் தொகுப்புகள் முறையே 2021, 2022 மற்றும் 2024 ஆண்டுகளுக்கான மத்திய சாகித்திய அகாதெமி – யுவபுரஸ்கார் விருது குறும்பட்டியலில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. ‘மேலும்’ அறக்கட்டளையும் இவரை அங்கீகரித்துள்ளது. படைப்புகள் பல்வேறு கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவின் தகுதித் தேர்வில் (NET – JRF) வெற்றி பெற்றவர். திட்டப்பணியாளராகவும் (Project Fellow) செயல்பட்ட இவர், தற்போது சுயாதீன மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.     [email protected] இவருடைய ஆக்கங்கள்: சொல் வெளித் தவளைகள், கவிதைகள், 2018, எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. இரண்டாம் பருவம், கவிதைகள், 2021, எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. தொல்காப்பிய வழித் திறனாய்வு (ஐந்து பயனாக்கக் கட்டுரைகள்), கட்டுரைகள், 2023, பரிசல், சென்னை. தெலுங்கு மொழியாக்கம்: கண்ணீரின் நிறங்கள், கவிதைகள், 2018, திராவிடப் பல்கலைக்கழகம்,  குப்பம், ஆந்திரா. இவருடைய மேலும் நான்கு புதிய நூல்கள் வரும் கண்காட்சிக்கு வெளியாகின்றன. அவற்றுள் இக்கவிதையை உள்ளிட்ட றாமின் புதிய கவிதைத் தொகுப்பான 'சட்டை வண்ண யானைகள்' நூலும் ஒன்று; வெளியீடு: கொம்பு