கட்டக்கால் வேட்டை

தேர்ந்த விளையாட்டு வீரனின் சாயலில் வேல் கம்பையெடுத்து,
முடி முளைத்த ராத்திரியென ஓடும் தடிபன்றியின் முன்னெஞ்சுக்கு குறிவைத்து எறிகிறேன்.
கூரினை நெளித்துப்போட்டு வேகமெடுக்கிறது.
தலைக்கு வீசிய ஐந்தாறு
வெங்காய வெடிகளுக்கும்
பாய்ச்சல் குறையவில்லை.
பின்னால் கேட்கும்
குட்டிகளின் அலறலுக்கு
வெறிவீறிட திரும்பிய பன்றி
எனை மல்லாத்திவிட்டு
ஈரிரண்டு கால்கள் விரிய
எனக்கு மேலே தாவுகிறது.
விழுகையில் உறைந்த
மழைத்துளிகளைப் போன்ற அதன் மார்க்காம்புகள் கண்களருகே தெரிகின்றன.
துளிகளைத் தாங்கிடும்
பன்றியின் அடிவயிற்று வானை
விறைத்த எனது சூரிக்கத்தி நேர்கோட்டில்
வகுந்திட நூலளவே இடைவெளி.
பன்றிக்குட்டிகளின்
அனாதைக் குறுவால்கள் கனவுகளையாட்டி தூங்கவிடாதென்பதால்
சூரியை உயர்த்தவில்லை.

* கட்டக்கால் – கறுப்பு பன்றி


-முத்துராசா குமார்

7 COMMENTS

 1. பன்றிவேட்டையை நேரிலே பார்ப்பது போல் உள்ளது. நல்லவேளை குட்டிகளின் குறுவால்கள் சூரிக்கு உறைபோட்டன. கவிதை நன்று. பாராட்டுகள்.

 2. ஈரத்தோடு முடியும் கவிதை பிரமாதம் தோழர்

 3. அருமை தோழர்..பன்றி வேட்டையை நேரில் பார்த்ததுபோன்று இருந்தது..

 4. “அனாதைக் குறுவால்கள்
  கனவுகளையாட்டித்
  தூங்கவிடாதென்பதால்”
  இவ்வரிகள் ‘தொடர்ச்சி மலை’யென விரிந்துகொண்டே செல்ல வைக்கின்றன.
  கவிதை எப்போதும் ஒரு கட்டத்தில் அனாதையாய் நின்றுவிடும் அல்லது நிறுத்திவிடும், பின்னான உணர்வுகள் நீண்டுகொண்டே செல்லும். வாழ்த்துகள்:)

 5. விறைத்து நின்ற சூரிக் கத்தி நெகிழ்கிற தருணத்தில் தாயாகிறான் வேட்டைக்காரன்….

 6. Could you please repeat that? http://taiwaneseamerican.org/?s=Viagra%20Approved%20Pharmacy%20%E2%AD%90%20www.HealthMeds.online%20%E2%AD%90%20Buy%20Viagra%20100mg%20-%20Cheap%20Viagra%20Online cheap viagra online
  “Taking into account the extent of federal fiscal retrenchment, the committee sees the improvement in economic activity and labor market conditions since it began its asset purchase program a year ago as consistent with growing underlying strength in the broader economy,” it said.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.