Tag: எலிஸபெத் பிஷப்
எலிஸபெத் பிஷப் கவிதைகள்.
காத்திருப்பு அறையில்
மாசசூசெட்ஸின் வொர்சஸ்டரில்,
பல்மருத்துவரைப் பார்க்கச் சென்ற அத்தை கன்சூலோவுடன்
நானும் சென்றிருந்தேன்.
அவள் மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும்வரை
காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன்.
அது பனிக்காலம். சீக்கிரமே இருட்டி
விட்டிருந்தது. காத்திருப்பு அறை முழுக்க பெரியவர்களே நிரம்பியிருந்தனர்,
கணுக்கால் வரை உயர்ந்த காலணிகளும்...