Tag: மொழிபெயர்ப்பு கவிதைகள் கனலி_31
பார்பரா குரூக்கர் கவிதைகள்
1. இயல்பு வாழ்க்கை
அந்நாளில் எதுவுமே நடக்கவில்லை
பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளின்
புத்தகங்களும் கையுறைகளும்
நண்பகலுணவும் நினைவினில்.
காலையில் தரையின்
ஒளிக்கட்டங்களில்
அடுக்கும் விளையாட்டினை
ஆடினோம் குழந்தையும் நானும்.
குட்டித்தூக்கம் நண்பகலுணவோடு
ஒட்டிக்கொண்டு வந்தது.
சமையலறை நிலைப்பேழையைத்
தூய்மையாக்கினேன்.
ஒருபோதும் முடிக்கவே
முடியாத வேலை அது.
சூரியவொளியின் வட்டத்தில்
அமர்ந்து இஞ்சித்தேநீர்
குடித்தேன்.
சிதறிக்கிடந்த உணவுத்
துணுக்களுக்காக அங்கே
பறவைகள் முண்டியடித்துக்
கொண்டிருந்தன.
முள்ளம்பன்றியின்...