கனலி கலை-இலக்கிய இணையதளம் வாய்ப்பும் சாத்தியமும் உள்ள போதெல்லாம் இலக்கியம் சார்ந்த அத்தனை வடிவங்களிலும் புதுமையான முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது.
அதன் முதல் படியாக, குறுங்கதைகள் என்கிற வடிவத்தை குறித்தான விவாதங்களை இங்கு தொடங்க விரும்புகிறது. இந்த விவாதம் என்பது வேறொன்றுமில்லை.
‘குறுங்கதை பரிசுப் போட்டி’
குறுங்கதை பரிசுப் போட்டி’ எளிய விதிமுறைகள்.
- குறுங்கதை உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
- 150 வார்த்தைகளுக்கு மிகாமல் அல்லது அதற்குள் இருக்கு வேண்டும்
- கண்டிப்பாக MS WORD பார்மட்டில் மட்டும் அனுப்ப வேண்டும். இதை தவிர்த்து மின்னஞ்சல் Compose ல் தட்டச்சு செய்து அனுப்பும் குறுங்கதை ஏற்றுக் கொள்ள முடியாது.
- நவம்பர் 30 தேதிக்கு பிறகு வரும் படைப்புகள் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.
- குறுங்கதை அனுப்பும் மின்னஞ்சலில் உங்கள் பெயர், முகவரி மற்றும் அலைப்பேசி எண் கட்டாயம் இருக்க வேண்டும். இது இல்லாமல் வரும் எந்த படைப்புகளும் ஏற்றுக் கொள்ளப்படாது.
- “கனலி குறுங்கதை போட்டி” என்ற தலைப்பில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
- ஒருவர் பல குறுங்கதைகள் அனுப்பினால் அனைத்து கதைகளையும் இணைத்து ஒரே மின்னஞ்சலாக மட்டும் அனுப்ப வேண்டும்.
- ஒருவர் எத்தனை குறுங்கதை அனுப்பி வைத்தாலும் ஒரு பரிசு தொகை மட்டும் கிடைக்கும்.
- இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
* ஏற்கனவே முந்தைய மின்னஞ்சலுக்கு ([email protected]) குறுங்கதைகள் அனுப்பியிருந்தால், அதை மீண்டும் ஒருமுறை கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு பார்வார்டு செய்யவும்.
பரிசு விவரங்கள் :
- முதல் பரிசு: 3000 ரூபாய்
- இரண்டாம் பரிசு: 2000 ரூபாய்
- மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்
- ஐந்து ஆறுதல் பரிசுகள் : 500 ரூபாய்
படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:
[email protected]
தொடர்புக்கு : 9080043026, 9600321289
குறுங்கதைகள் அனுப்ப கடைசி தேதி: நவம்பர் 30 -2019
நன்றி..!
கனலிக்கு எனது வாழ்த்துகள்
கனலி குறுங்கதை போட்டி வெற்றியாளர் அறிவிப்பு எப்போது ?