முன்னொரு காலத்தில் வயதான ஒரு பெண் தன் துணிகளை துவைப்பதற்காக நதிக்கரையோரம் சென்றாள். அப்பொழுது அந்த நதியில் ஒரு பீச் பழத்தை கண்டு அதை எடுத்துக்கொண்டாள். தன் கணவரிடம் காண்பிப்பதற்காக அதை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்தார்.
வீட்டிற்கு வந்ததும் அந்தப்பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்ட முயற்சித்தப்பொழுது, தீடீரென்று அந்தப்பழத்தை பிளந்துக்கொண்டு ஒரு சிறுவன் வெளியே குதித்தான். அவனை அவர்கள் மமோதாரோ என்று பெயரிட்டு அழைத்தனர்.
மமோதாரோ வளர்ந்து வலிமையுள்ளவனாக ஆனான்.
ஆனால் அங்கிருக்கும் அரக்கன் கிராமத்தவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். அதனால் மமோதாரோ, அரக்கர்கள் தீவுக்கு சென்று அரக்கனை எதிர்த்து போரிட முடிவெடுத்தான்.
இதையறிந்த அவன் அம்மா, அவனுக்கு 100 மனிதர்களின் சக்தியை தரும் சிறப்புவாய்ந்த பாலாடைஉருண்டைகளை தயார்செய்துக் கொடுத்தார். அதில் சிலவற்றை தன்னுடன் எடுத்துக்கொண்டு சென்றான்.
செல்லும் வழியில் மமோதாரா நாயுக்கும், பாலாலை உருண்டைகளை கொடுத்ததால், வீரமடைந்த அந்த நாயும் அவனுடன் சேர்ந்துக்கொண்டது.
தீவுக்கு செல்லும் வழியில், குரங்கும், பறவையும் அவர்களுடன் சேர்ந்துக்கொண்டது.
அவர்கள் மிகப்பெரிய அரக்கனுடன் போரிடுவதற்காக அரக்கர்களின் தீவுக்கு பயணம் செய்தனர். அந்த தீவில் நிறைய அரக்கர்கள் அவர்களுக்காக காத்துக்கொண்டிருப்பதை கண்டனர்.
அவர்கள் மிகப்பெரிய அரக்கனை சந்தித்தப்பொழுது, நாய் அந்த அரக்கனின் காலை கடித்தது. குரங்கு அரக்கனின் முதுகை பிராண்டியது. பறவை தன் அலகால் அரக்கனின் கண்னை குத்தியது. ஒற்றுமையாக அனைத்து அரக்கர்களையும் அவர்கள் அடித்து துவம்சம் செய்தனர்.
மீண்டும் கிராமத்தவர்களை துன்புறுத்தக்கூடாது என்று அரக்கர்களிடமிருந்து சத்தியம் வாங்கிக்கொண்டனர். அரக்கர்கள் வைத்திருந்த அனைத்து செல்வங்களையும் கைப்பற்றினர். கிராமத்திற்கு திரும்பிய மமோதாரோ அனைத்து செல்வங்களையும் கிராமத்தவர்களுக்கு சமமாக பிரித்துக்கொடுத்தான். கிராமத்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தனர்.
மூலம் : ஜப்பானியச் சிறார் நாட்டுப்புற கதைகள்
தமிழில் : ரா.பாலசுந்தர்
நன்றி/Source Courtesy :