நல்லதேசம் (மீண்டும் திருவிளையாடல்)

மரகத தேசத்தின் மன்னர்; விக்ரமன்; சிறு வயதிலேயே பட்டத்திற்கு வந்தவர்; சிறந்த அறிவாற்றல் கொண்டவர். ;ஆனால் அரச காரியங்களில் போதிய அனுபவம் இல்லாதவர்.; வயதில் மூத்தவர் என்ற முறையில் மந்திரியார் நிறைமதியார்தான்; மன்னருக்கு பல சந்தர்ப்பங்களில் வழிகாட்டி வந்தார்.“ஒருதேசம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் ஒரு தேசத்தின் குடிமக்கள் ஓரு மன்னனிடம் எதை எதிர்பார்;ப்பார்கள் என்பதை எல்லாம் நிறைமதியார் மன்னருக்கு உணர்த்த விரும்பினார். மன்னருக்கு நேரிடையாக அறிவுரை கூறுவது ஏற்புடையதல்ல;. வேறு எப்படிச் சொல்வது என்ற யோசனையில் இருந்த சமயம்; ஒரு நாள் புலவர் மகேசன் நிறைமதியாரைக் காணவந்தார். அவர் ஒரு வானம்பாடி; தேசம் தேசமாகச் சுற்றுபவர். பற்றுக்கள் இல்லாதவர்; அனைத்து தேசமக்களும் வளமுடன் வாழவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்; அவரிடம் மந்திரியார் தனது எண்ணத்தைச் சொன்னார். நீண்ட தனது வெண்தாடியை வருடியபடி யோசித்த புலவர் “நான் இதற்குஒரு வழி செய்கிறேன்!”–என்றபடி மந்திரியாரின் காதில் ஏதோ குசுகுசுத்தார். மந்திரியாரும் அதை ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்.

மன்னர் விக்ரமன் ஒருநாள் அவையில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார். அப்போது புலவர் மகேசன் அங்குவந்தார். புலவர்கள் என்றால் வறுமையில் வாடுபவர்கள். எதையாவது இரந்து பெற கவிபாடுபவர்கள் என்ற எண்ணம் கொண்டவர் மன்னர்; அவர் புலவர் மகேசனை ஏளனம் செய்யும் விதமாக“என்ன புலவரே! உமது வீட்டுப் அடுக்களையில் பூனை படுத்துறங்குகிறதோ? எம்மைக் கவிபாடி பரிசில் பெற வந்தீரோ?”–என்றுகேட்டார்.

“யாம் உம்மைக் கவிபாட வரவில்லை! உம்மிடம் ஒரு கேள்வி கேட்க வந்தோம்!”–புலவர் மகேசன் கம்பீரமாகச்சொன்னார்.

“மன்னனிடம் கேள்வியா?”–ஆச்சரியத்துடன் நிமிர்ந்தார் மன்னர்;

“ஒரு தேசம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்?” –கேட்டார் புலவர்; புலவரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை மன்னர் எதிர்பார்க்கவில்லை. அவர் தடுமாறினார். “ஒருதேசம்…எனதுதேசம் போல் இருத்தல் வேண்டும்!”–என்று நா குளறியபடி பதில் சொன்னார்.

“எனக்குத் தெளிவான பதில் வேண்டும்!”–என்றார் புலவர். மன்னர் மந்திரியாரைப் பார்த்தார். மந்திரியார் தனக்குத் தெரியாதுஎன்பதுபோல் வேண்டுமென்றே உதட்டைப் பிதுக்கினார்.

“மன்னா அவசரமில்லை! போதிய அவகாசம் எடுத்துக் கொண்டு இதற்குப் பதில் கூறுங்கள்!”–என்ற புலவர் மன்னரை எதிர்பாராமல் அவையை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டார்.

“இது ஒரு அடிப்படையான கேள்வி; இதற்குப் பதில் தெரியாமலா நான் இத்தனை நாளாய் ஆட்சி செய்து வருகிறேன்?” – மன்னருக்கு வெட்கம் வந்தது. அவர் அரியணையில் கூனி குறுகி அமர்ந்திருந்தார். அப்போது மந்திரியார் மன்னரிடம் “மன்னா! தவறாக எண்ண வேண்டாம்! புலவர் ஒரு வானம்பாடி! எதையும் இரந்து பெற அவர் கவி பாடுவதில்லை! அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆயிரம் பொருள் படும்! அவரின் இந்தக் கேள்விக்குப் பின்னாலும் ஏதேனும்ஒருபொருள் தொக்கிநிற்கக் கூடும்!பேசாமல்நாம் இந்தக் கேள்வியைநாம் நமதுகுடிமக்களிடம் கேட்டுவிடுவோம்!”–என்றார். மன்னருக்கும் அப்படித்தான் தோன்றியது. “அப்படியேஆகட்டும்!”–என்றார் அவர்; புலவரின் கேள்வி நாடெங்கும் பறைசாற்றி அறிவிக்கப்பட்டது. சிறந்தபதில் தருவோருக்கு நூறு பொற்காசுகள் பரிசுஎன்றும் அறிவிக்கப்பட்டது.

சிலநாட்கள் சென்றன. ஒரு ஓய்வான தினத்தன்று வரப்பெற்ற பதில்களை எல்லாம் மந்திரியாருடன் அமர்ந்து மன்னர் ஆராய்ந்தார். ‘ஒருநல்லதேசத்தில் செல்வந்தர்கள் அதிகம் வசிக்கவேண்டும்’என்றிருந்நார் ஒரு அன்பர்; ‘கல்வியில் சிறந்து விளங்கவேண்டும்’என்றிருந்தார் மற்றொருவர்; ‘நல்ல விளைச்சல் வேண்டும்! நோய் வறுமை இன்றி மக்கள் வாழவேண்டும்! நீர்வளம் வேண்டும்! இயற்கையாக அமைந்த அரண்கள் வேண்டும்! கொடிய குற்றங்கள் இல்லாதிருத்தல் வேண்டும்’என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள்.

ஒரு கேள்விக்கு இத்தனை கோணங்களில் பதில்களா என மன்னர் ஆச்சரியம் அடைந்தார். ஒரு மன்னனிடம் குடிமக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவரால் புர்pந்துகொள்ள முடிந்தது. அவர் மந்திரியாரிடம் “அனைத்துப் பதில்களும் நன்றாகத்தானே இருக்கிறது? பேசாமல் அனைவருக்கும் நூறு பொற்காசுகள் பரிசளித்துவிடலாமா?”–எனக் கேட்டார்.

“இவைகளைக் காட்டிலும் வேறுஏதும் சிறந்த பதில்கள் வருகிறதா என ஓரிரு நாட்கள் பொறுத்துப் பார்ப்போம்!” என்றார் மந்திரியார். மன்னரும் அதற்கு ஒத்துக் கொண்டார்.

ஒருநாள் நாற்பது வயது மதிக்கத் தகுந்த நபர் ஒருவர் அவைக்கு வந்தார். அவர் தன்னை தருமி என்று அறிமுகப்படுத்திக் கொண்டாhர்;. அப்போது மன்னரும் அவையில் இருந்தார்.

“ஒரு நல்ல தேசத்திற்கு மடையாக மன்னன் இருத்தல் வேண்டும்”–என்றார் தருமி;

“என்ன பதில் இது? கொஞ்சம் புர்pயும் படியாகச் சொல்ல முடியுமா?’–கேட்டார் மந்திரியார்.

“காட்டாற்று வெள்ளம் இருக்கிறது! அதை அப்படியே வி;ட்டு விட்டால் எதற்கும் பயன்படாமல் ஓடி விPணாகிவிடும்! அதுவே மடைகொண்டு தடுத்திட்டால் அந்த நீரைக் குடிநீராகவோ பாசனத்திற்கோ நமது தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்திக் கொள்ளலாம்! ஒரு நாட்டின் வளங்களும் இது போலத்தான்! ஒருதேசத்தில் செல்வந்தர்கள் பலர் இருக்கலாம்! அவர்கள் வணிகம் செய்யதொழில் செய்யஉகந்த சூழல் வேண்டும்! அறிஞர்கள் இருக்கலாம்! அவர்கள் கற்ற கல்வியை பிறருக்கு அளிக்க நல்ல பாடசாலைகள் வேண்டும்! நல்ல விளைச்சல் இருக்கலாம்! அதை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க சிறந்த விநியோகம் வேண்டும்! இயற்கையாக  அமைத்த அரண்கள் இருக்கலாம்! அதை தனது பாதுகாப்பிற்குப் பயன்படுத்திக் கொள்ள உறுதிமிக்க தீரம் வேண்டும்! அதற்குத் தலைமைப் பண்புகள் கொண்ட நல்லஅரசன் வேண்டும்! இல்லாவிட்டால் மடைமாற்றம் செய்யப்படாத காட்டாற்று வெள்ளம் ஓடி வீணாவது போன்று அனைத்து வளங்களும் வீணாகிவிடும்!”–என்றார் தருமி.

 

– மா.பிரபாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.