நன்றாக குடி
1. எப்பொழுதும் நல்ல போதையிலிருக்க வேண்டும். எல்லாம் இருக்கிறது. அதுதான் பிரச்சனை. காலத்தின் கொடிய சுமை உன் தோள்களை முறித்து உன்னை நிலத்தில் குனியும்படிச் செய்வதை நீ உணராமல் இருக்கவேண்டுமென்றால் நீ நல்ல போதையில் இடையீடில்லாமல் இருக்கவேண்டும்.
2. எதன் மூலம்? மது, கவிதை. அல்லது நீதிபோத உணர்வு உன் வகையில். ஆனால் போதையில் இருக்கவேண்டும்.
3. சில சமயம் – ஒரு அரண்மனையின் வாசற்படிகளில், ஒரு ஓடையின் பச்சைப்புல் பரப்பில், உன் சொந்த அறையின் சலித்துப்போன தனிமையில், நீ போதையிலிருந்து விடுபடுகையில், உன்னுடைய போதை அதற்குள் தணிந்திருக்கலாம். அப்பொழுது கேள். காற்றை, அலையை, நக்ஷத்ரத்தை, பக்ஷியை, கடிகாரத்தை. எது எது பறக்கிறதோ, எது எது உருண்டு செல்கிறதோ அதை. எது எது பாடுகிறதோ அதை. எது எது பேசுகிறதோ அதை கேள். இப்பொழுது சமயம் என்ன என்று. காற்றுச் சொல்லும். போதையில் ஆழ்வதற்கு சரியான சமயம். காலத்தின் ஹிம்சைக்கு அடிமைகளாக இல்லாமல் இருக்க விடாமல். நிறுத்தாமல் போதையில் இரு – மதுவில். கவிதையில். அல்லது நீதிபோத உணர்வில் உன் வகையில்.
பாதலேரின் பிரஞ்சுக் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் ‘நகுலன்’
நன்றி,
பார்வை