என் பெயர் சரண்ராஜ். வயது 23. நான் புதுச்சேரியில் Graphic Designer ஆக பணி புரிகிறேன். வேலை நாட்கள் போக விடுமுறை நாட்களில் புகைப்படங்கள் எடுப்பது எனக்கு பிடித்தமான ஒன்று.
இந்த புகைப்படம் செஞ்சியில் எடுக்கப்பட்டது. உச்சி மலையின் இடுக்குகளில் ஒரு ஆடு எந்த பயமுமின்றி இரு கால்களை ஊனி தாவரம் உண்ணும் காட்சி என்னை பிரம்மிக்க வைத்தது. அதை காட்சி படுத்தினேன்.
இந்த புகைப்படம் புதுச்சேரி உழவர் சந்தையில் எடுக்கபட்டது. மூட்டை தூக்கும் உழைப்பாளியைக் காட்சிப்படுத்தும் நோக்கில் எடுத்தது.
இந்த புகைப்படம் புதுச்சேரி கடற்கரையோரத்தில் எடுக்கபட்டது. மழைக்கு முந்திய ராட்சச மேக்கூட்டங்களுக்கு மத்தியில் தந்தை மகள்கள் பந்தை தூக்கிப்போட்டு விளையாடும் காட்சியோடு படம் பிடித்தேன்.
வாழ்த்துக்கள் மச்சான்…
– லோகேஷ்
மிக அழகான புகைப்படங்கள். பொருத்தமான மற்றும் அளவான வார்த்தைகள். வாழ்த்துக்கள் சரண்ராஜ்.
மிக அழகான புகைப்படங்கள். பொருத்தமான மற்றும் அளவான வார்த்தைகள். மிகப் பயனுள்ளள பொழுதுபோக்கு. வாழ்த்துக்கள் சரண்ராஜ்.