Tag: முத்துராசா குமார்

கம்மா > மடைகள் > வாமடை

கம்மா காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள் தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியது படகினுள் மிதக்கும்  சமுத்திரமென தெரிந்தது. தளும்பும் சமுத்திரக் குட்டியென்று எனது கையின் பதினோறாவது  குறுவிரல் வியப்பானது. பாளையை மாதிரியாக வைத்து சந்ததித் தொடர்ச்சியாய் வெட்டாத நகங்களால் சமுத்திரத்தின் குட்டியான  கம்மாவைத் தோண்டினேன். கருவாச்சி மடை கொடியறுக்காத சிசுவாய் கருவுக்குள் நானிருக்கையில் பால்சோறு பிசையும்  கிண்ணத்தின் அளவே...

கட்டக்கால் வேட்டை

தேர்ந்த விளையாட்டு வீரனின் சாயலில் வேல் கம்பையெடுத்து, முடி முளைத்த ராத்திரியென ஓடும் தடிபன்றியின் முன்னெஞ்சுக்கு குறிவைத்து எறிகிறேன். கூரினை நெளித்துப்போட்டு வேகமெடுக்கிறது. தலைக்கு வீசிய ஐந்தாறு வெங்காய வெடிகளுக்கும் பாய்ச்சல் குறையவில்லை. பின்னால் கேட்கும் குட்டிகளின் அலறலுக்கு வெறிவீறிட திரும்பிய பன்றி எனை மல்லாத்திவிட்டு ஈரிரண்டு...

முத்துராசா குமார் கவிதைகள்

1) வில்லிசைக்காரி இறந்து முப்பது கடந்தும் 'உன்னை ஒரு நாள் பார்க்க வருவேன்' என்ற அவளது குரலே கனவை நிறைக்கிறது. திண்ணையின் முக்கோணக் குழியைச் சுத்தப்படுத்தி கிளியாஞ்சட்டியில் நீரும் பருக்கையும் வைத்து தினமும் காத்திருப்பேன். மரத்தாலோ கல்லாலோ மண்ணாலோ வீசுகோல்களை செய்துவிடலாம். அவளது கரங்களை எதைக்கொண்டு செய்வதென்பதுதான் பதட்டத்தைக் கூட்டுகிறது. நரைமுடிகளின் நுனி நீர்...

கதை

'அந்தக் காலத்தில் போர்வெல் முதலாளியை மிகவும் சோதித்தன ஊற்றுகள். ஒளிரும் ஆபரணங்களோடு இயந்திர முனையில் தன்னையே பொருத்தி பூலோகத்தை ஆழத் துருவி ஊடுருவினார். அவர் இறங்க இறங்க ஊற்றுகளும் பதுங்கின. விடியலில் மேலே வந்த இயந்திரத்தில் முதலாளி இல்லை. மூவாயிரம் ஆண்டுகள் கழித்து தொல் எச்சமான முதலாளியே நமக்கு நாட்டார் தெய்வமானார்' பயண...

முத்துராசா குமார் கவிதைகள்

எச்சித்தட்டு புதையலாகத் தென்பட்டது தட்டில் பொறித்தப் பெயர். வழித்தாலும் உட்கொள்ள முடியவில்லை. இரவில் எப்படியும் அபகரித்துவிட புதையலுக்கு மேலே வனம் செய்து நீர் தேக்கினேன். வனம் அழித்து வறட்சியாக்கியும் புதையலைப் பெயர்க்க முடியவில்லை. மூன்று வேளைத் தோல்விகள் தாளாது பெயருடைய ஆளையே விழுங்க எழுந்தேன். சுவரில் தொங்கும் கண்ணாடிச் சட்டகத்துக்குள் சேரில் அமர்ந்திருந்தார்...