நட்சத்திர தேவதை


திய  உணவு இடைவெளிக்குப் பிறகு, பாண்டு சார் புவியியல் வகுப்பில் ‘நட்சத்திரங்களைப்’பற்றி பாடம்  நடத்திக் கொண்டிருந்தார். பாடம் நடத்தும் போதே, நட்சத்திரங்கள் குறித்த கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான் அருண். எப்படியாவது நட்சத்திரங்களைப் போய் பார்க்க வேண்டும் என்ற முடிவில் அருண் யோசித்துக் கொண்டிருந்தான்.

பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில், சூரியன் மறையும் நேரம் சில நட்சத்திரங்கள் வானில் தெரிய ஆரம்பித்தன.  அவற்றை எண்ணியவாறே வீட்டுக்குச் சென்றான்.

வீட்டுக்குச் சென்றதும் நட்சத்திரங்கள் மீதான அருணின் ஆர்வம் குறைந்ததாகத் தெரியவில்லை.

பள்ளிக்கூடம் முடித்து வீட்டுக்குச் சென்ற பின், தன் தினசரி பள்ளி வேலைகளை முடிக்க ஆரம்பித்தான். பிறகு, தன் அம்மாவிடம் தினமும் பள்ளியில் நடந்ததைச் சொல்வது அருணின் வழக்கம். அன்று மிகவும் ஆர்வமாக புவியியல் வகுப்பில் பாண்டு சார் எடுத்த   “நட்சத்திரங்கள்”  குறித்த  பாடத்தை விவரித்தான்.

தன் பள்ளி வேலைகளை முடித்த பின். நட்சத்திரங்கள் மீதான அதீத ஆர்வத்தில் சாட் பேப்பர்களைத் தேட ஆரம்பித்தான்.

ஒரு வழியாக சாட் பேப்பர்களை  எடுத்து நட்சத்திர  வடிவில் வெட்டி வண்ணம் தீட்ட ஆரம்பித்தான் அருண். ஒவ்வொன்றாக வண்ணம் தீட்டிக் கொண்டிருக்கும் போது, மஞ்சள் வண்ண நட்சத்திரம் அருணிடம் பேச ஆரம்பித்தது.

அருணுக்கு ஆச்சரியம்.

மஞ்சள் நட்ச்திரம்:  “அருண்! அருண்! நா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரப் போகிறேன்

நீ நட்சத்திரங்களின் மேல  நிறைய பிரியமா  இருக்கிற காரணத்தால்”.

அருண்என்ன சர்ப்ரைஸ் தரப் போற? சொல்லிட்டுத் தா 

மஞ்சள் நட்சத்திரம் : “சொல்லிவிட்டுத் தந்தால் சுவாரஸ்யம் இருக்காது டா அருண்.நீ என் கூட மட்டும் வருவியா னு மட்டும் சொல்லு, நா உன்ன  கூட்டிட்டு போறேன்” .

அருண்: “சரி நா வரேன்.ஆனா ஒன்னு சீக்கிரம் என்ன இங்க வந்து  விட்டுடனும். அம்மா அறைக்கு வரத்துக்குள்ள”.

மஞ்சள் நட்சத்திரம் சரி என  ஒப்புக்  கொண்டது.  உடனே இருவரும் தயாராகிவிட்டனர்.

மஞ்சள் நட்சத்திரம் அருணைப் பார்த்து  ரசிக்கத் தொடங்கியது.

மஞ்சள் நட்சத்திரம் : “அருண்.  நாம இப்ப  கீழ இருந்து மேல போகப் போகிறோம்.  பயப்படாம என் கூட வரனும்” .

அருண்: “சரி எனத் தலையாட்டினான்”

இருவரும் மண்ணுலகத்திலிருந்து  விண்ணுலகத்திற்குப் பறந்து செல்ல ஆரம்பித்தனர்.   மேலே பறந்து செல்லச்  செல்ல மண்ணுலகை மிகவும் பிரமிப்பாய் பார்த்து வந்தான் அருண். அவனுள் சில கேள்விகள் எழுந்தன. அதனை மஞ்சள் நட்சத்திரத்திடம் கேட்டுக்கொண்டே வந்தான். அதில் ஒரு கேள்வி மிகவும் வியந்து கேட்டான் அருண்,

அருண் : “நா இப்ப மேல பறந்து வர வர எல்லாம் சிறிசா தெரியுது. ஆனா நா கீழ இருந்து பாக்கும் போது நீங்க (நட்சத்திரங்கள்) சிறிசா தெரியுரீங்க” என்றான்.

மஞ்சள் நட்சத்திரம்:”அதுக்கு  விடை  தெரியனும் னா. நான் இப்போ

எங்க நட்சத்திர உலகத்திற்கு கூட்டிட்டுப் போறேன்”.

இருவரும் மண்ணுலகிலிருந்து நட்சத்திர உலகத்தில் காலடி எடுத்து வைத்தனர்.

நட்சத்திர உலகின் ராஜா “வெள்ளி” அருணை வரவேற்றார்.

 மஞ்சள் நட்சத்திரம் அருணை நட்சத்திர உலகைச் சுற்றிக் காண்பித்தது.

நட்சத்திரங்கள் எல்லாம் தனது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன.

சுற்றிச் சுற்றி வியந்து பார்த்துக் கொண்டிருந்த அருணை கண்டு  மகிழ்ச்சியடைந்தது மஞ்சள் நட்சத்திரம்.

மஞ்சள் நட்சத்திரம் சில கேள்விகளை அருணிடம் கேட்க ஆரம்பித்தது.

மஞ்சள் நட்சத்திரம் : “அருண்! நீ வரும் போது கேட்ட  அந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்ததா” 

அருண்:  ஆமாம்.கிடைத்தது”. 

மஞ்சள் நட்சத்திரம் :  சொல்லு”

அருண்: “கீழ இருந்து பாக்குறப்ப நீங்க எல்லாம் கடுகு மாதிரி இருந்தீங்க. ஆனா மேல வந்து பார்த்தா தான் தெரிது, நீங்க எல்லாம்  யானை பெரிசுனு”.

மஞ்சள் நட்சத்திரம்:  “ஆமா அருண்”. 

அதே தான்.இப்போது அதே வாழ்க்கையில எப்படி இருக்குமென்று        சொல்லப் போகிறேன் கவனமா கேளு. வாழ்க்கையிலே நீ எதை அடையப் போகிறாயோ அது உனக்கு நிறையத் தொலைவில் இருக்கிற மாதிரி தெரியும். நீ விடாமுயற்சி செஞ்சிட்டே இருந்தா எல்லாம் பக்கத்தில் இருக்கிற மாதிரி தெரியும் எனச் சொன்னது”.

அருண்: “நீ சொன்னது தான் இப்பவும் நடந்து இருக்கு.நான் நட்சத்திரங்கள் மேல ஆர்வமா இருந்து நினைத்ததினால நா நட்சத்திர உலகத்திற்கே வந்துவிட்டேன்”. 

மஞ்சள் நட்சத்திரம்: “சரியா சொன்ன அருண்.வாழ்க்கையிலும் இதே தான் .குறிக்கோளுடன் பயணம் செய் வெற்றி நிச்சயம்”.

அருண்: “சரி.நாம வந்து  நேரமாயிடிச்சி வா  போகலாம். அம்மா வந்துடுவாங்க”.

மஞ்சள் நட்சத்திரம்: நாம கீழே போகலாம் வா”.

இருவரும் விண்ணுலகத்தில் இருந்து மண்ணுலக பயணத்திலிருந்தார்கள்.

அருண் நட்சத்திரங்கள் பார்த்த மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டே கீழே வந்தான்.கேள்விகள் கேட்கவே இல்லை.

கீழே வந்ததும் மஞ்சள் நட்சத்திரம் கூறியது

மஞ்சள் நட்சத்திரம்: “அருண்.இனி உனக்கு எப்போதெல்லாம் நட்சத்திர உலகம் போகனும் னு  இருக்கோ.அப்போ என் கிட்ட சொல்லு”.

அருண்: “சரி.நான் உன்ன என் புவியியல் புத்தகத்தில் பத்திரமாக வைக்கிறேன்”.

கீழே வந்ததும் மஞ்சள் நட்சத்திரத்தை புவியியல் புத்தகத்தில் பத்திரப்படுத்தினான்.

பிறகு கதவைத் திறந்து வெளியே சென்றதும். அம்மா அவனைச் சாப்பிடக் கூப்பிட்டார்கள்.


  •   இர.நவின் குமார்

4 COMMENTS

    • இர.நவின் குமாரின் ‘நட்சத்திர தேவதை’ அருமையான புனைவு.குறிக்கோளுடன் பயணம் செய்தால் வெற்றி நிச்சயம்.உண்மை.அருமை..

      -தஞ்சிகுமார்.

  1. அந்த மஞ்சள் நட்சத்திரம் என்னையும் கூட கூட்டிடு போவுமா..?

  2. இப்படியும் இணைத்து அறம் காட்ட இயலுமா என வியக்க வைத்த கதை.. அருமை.. வணக்கங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.