விட்டுச்சென்ற வேதனை மட்டுமே அவள் மனதில் நிற்கிறது. கொட்டித்தந்த சந்தோஷம் விலகிப்போய்விட்டது. கண்ணைக் கூசிய வெளிச்சத்தில் வாழ்ந்துவிட்டு இப்போது பொட்டு வெளிச்சத்திற்கும் அவள் துழாவும்படியாகிவிட்டது. ‘ இதுதான் வாழ்க்கையா
அவளின் அவிழ்ந்து கிடந்த கூந்தல் இருளின் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அது இடைக்குக் கீழாகத் தாழ்ந்து தரையில் பரவியிருந்தது. மலையிலிருந்து வழியும் அருவியெனத் தலையிலிருந்து நீண்டு தொங்கிய