சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்

நடக்கும் மலை பறக்கும் நதி: சூழலியல் பற்றிய பௌத்தக் குறிப்புகள்

பௌத்தம் ஒரு புராதன, சிக்கலான நம்பிக்கை முறை. மனித துக்கங்கள் பற்றியும் அவற்றைக் களையும் வழிகள் பற்றியும் தியானிக்கும் சிந்தனை முறையை அடித்தளமாகக் கொண்டது. பௌத்த தர்மம் உலகின் சூழலியல் பிரச்னைகளுக்கு ஏதேனும்...

காவிரிக் கரையின் மொழி மரபு

காவிரியில் வெள்ளமும் வரும்; ஆண்டு தவறாமல் புயலும் வரும். இவை இல்லையென்றால் இந்த டெல்டா உருவாகி நிலைத்திருக்காது. புயலோடும் வெள்ளத்தோடும் ஒரு வக்கிரத் தோழமையைப் பரிந்துரைப்பதாக நினைக்கவேண்டாம். காவிரிப் படுகையில் மக்கள் புழங்கும்...

மின்னூர்திகளும் சுற்றுச்சூழலும்

முதலில் ஒரு முக்கிய புள்ளிவிவரத்தை பார்ப்போம் , அது நாம் பேசவிருக்கும் விஷயத்தை மனதளவில் கற்பனை செய்து கொள்ள உதவியாக இருக்கும் . இன்று உலகத்தில் அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் கார்களின மொத்த...

வனத்தின் ரகசியம்

கொரோனா கால நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக எங்காவது செல்லலாம் என்று முடிவெடுத்தபோது வால்பாறையைத் தேர்வு செய்தோம். அங்குச் சென்றடையும்வரை வழியெங்கும் வானுயர்ந்த மரங்களைத் தாங்கிய பள்ளதாக்குகளும் சாலையைக் கடந்து ஓடும் சிற்றறோடைகளும் துள்ளியோடும் மான்கள்,...

அவதானிப்பும் கரைதலும்: கவிஞர் ஆசையின் ‘கொண்டலாத்தி’ தொகுப்பை முன்வைத்து

அவதானித்தல் என்பது எதிரே இருக்கும் சூழலுக்குள் உட்புகாமல், ஒரு பாதுகாப்புத் திரைக்கு வெளியே நின்று கவனிக்கும் செயல்பாடு. சூழலோடு கரைந்துபோக பிரக்ஞையின் துணையோடு நிகழும் அவதானிப்பு என்ற செயல்பாடு நழுவி அகல வேண்டும்....

காலநிலை மாற்றம்: ஒரு மாற்றுத்துறை ஆய்வாளரின் பார்வை

மனித வாழ்வில் இன்று அதிமுக்கியமான இடத்தைப் பெற்றுவிட்ட கைபேசிகள், பாறை போன்ற நோக்கியாவில் இருந்து தொட்டாச்சிணுங்கி தொடுதிரை வரை என பரிணமித்திருக்கின்றன. தகவல்கள், கோப்புகளைப் பெட்டியில் சேமித்துக் கொண்டிருந்த நாம், இப்போது GBக்களில்...

வரைபடங்கள் உணர்த்தும் சுற்றுச்சூழல் உண்மைகள்

தமிழகம் கடந்த முப்பது ஆண்டுகளில் தொழில்துறையில் பலவிதமான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியின் விலையாக சுற்றுச்சூழலில் ஏற்பட்ட தாக்கங்கள் மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துவருகின்றன. சில வரைபடங்களைக் கொண்டு அதை இங்கு விளக்குகிறேன். இந்தக்...

அடையாளங்கள்

அவனுடைய வீடு, பிரதமர் துவக்கி வைத்த தங்க நாற்கரச் சாலையாக அகலப்படுத்திக்கொண்டிருக்கும் கிராமத்துச் சாலை ஓரத்தில். சாலை ஓரத்தில் ஏதோ நூற்றாண்டில் நாட்டை ஆண்டிருந்த மன்னர், கால்நடைப் பயணிகளுக்குக் காலாற நின்று ஓய்வெடுப்பதற்காகவும்...

காடர் குடி

போர்வைக்குள் புரண்டு கிடக்கும் குழந்தை உறக்கம் கலைந்து எட்டிப்பார்ப்பது போல, கருமேகங்களுக்குள் இருந்து சூரியன் மெல்லத் தலைகாட்டியது. நான்கு நாட்களுக்குப் பிறகு வெயில் சுளீரென அடித்தது. பஞ்சு பறப்பது போல வெண்மேகக் கூட்டங்கள்...

இமாம் பசந்த்

1 மாம்பழ மழை. மேகத்தை பொத்துக்கொண்டு மாங்கனிகள் விழுவது போல. ஒரு கனவு காட்சியைப்போல. கதைகளில் மட்டும் கொட்டும் பனியார மழைபோல. புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் கணவனுக்குப் படைக்க வேண்டிய மாங்கனியை சிவனடியார்...