கனலி கலை-இலக்கிய இணையதளம் வாய்ப்பும் சாத்தியமும் உள்ள போதெல்லாம் இலக்கியம் சார்ந்த அத்தனை வடிவங்களிலும் புதுமையான முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது.
அதன் முதல் படியாக, குறுங்கதைகள் என்கிற வடிவத்தை குறித்தான விவாதங்களை உருவாக்க முனைந்தப் போது எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அளித்த ஆலோசனையின் படி குறுங்கதைகளுக்கு என ஒரு பரிசுப்போட்டி நடத்தப்பட்டது. கனலி மின்னஞ்சலுக்கு ஆர்வத்துடன் பலரும் குறுங்கதைகளை அனுப்பி இருந்தனர். கிடைக்கப் பெற்ற குறுங்கதைகளிலிருந்து பரிசுக்குரிய படைப்புகளை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் போட்டியின் நடுவராக இருந்து தேர்வுச் செய்தார்.
பரிசுப் போட்டி முடிவுகள் இதோ…!
முதல் பரிசு:
பரிசுத் தொகை : ரூ 3,000
பரிசு பெற்ற குறுங்கதை : ரட்சகன்
எழுதியவர் : கார்த்திக் பாலசுப்பிரமணியன்
இரண்டாம் பரிசு:
பரிசுத் தொகை : ரூ 2,000
பரிசு பெற்ற குறுங்கதை : கடிதங்கள்
மூன்றாம் பரிசு
பரிசுத் தொகை : ரூ 1,000
பரிசு பெற்ற குறுங்கதை : பிம்பம்
எழுதியவர் : சரத் குமார்
ஐந்து ஆறுதல் பரிசுகள்
பரிசுத் தொகை தலா ரூ 500
பரிசு பெற்ற குறுங்கதைகள் :
1- நாளும் கிழமையும்
எழுதியவர் : ஞா.கலையரசி
2- பொம்மை
எழுதியவர் : பவித்ரா பாண்டியராஜூ
3- இலவசம்
எழுதியவர் : வே.சுப்பிரமணியன்
4- சிறைகள்
எழுதியவர் : கமலக்கண்ணன்
5-கருப்புசாமியும் நானும்
எழுதியவர் : ராம்குமார்
- பரிசுப் பெற்ற குறுங்கதைகள் கனலியின் அடுத்த இணைய இதழில் வெளியாகும்.
குறுங்கதைகளை தேர்வு செய்து உதவிய எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்களுக்கு சிறப்பு நன்றி..!
குறுங்கதைப் போட்டியில் கலந்துக் கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கு நன்றியையும் பரிசுப் பெற்ற படைப்பாளர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது கனலி கலை இலக்கிய இணையதளக் குழு.!
மீண்டுமொரு மாற்று முயற்சியில் சந்திப்போம்…!
-கனலி கலை இலக்கிய இணையதளக்குழு
வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். கதைகளை அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.
சிறந்த கதைகள் –
இளையவர்கள் பங்கும், அறிமுகமும் தான் முக்கியம் …
—தேடி அல்லது இணைக்கப்பட வேண்டிய /அறியப்பட வேண்டியவர்களை எழுத வையுங்கள்… — R .விமலா வித்யா