கனலி இணைய இதழ் 10


னலி வாசகர்களுக்கு வணக்கம் !

[mkdf_dropcaps type=”” color=”black” background_color=””]க[/mkdf_dropcaps]னலி பத்தாவது  இணைய இதழ் வழியாக உங்களுடன் உரையாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.  ‘கனலி’ கலை – இலக்கிய இணையதளமாகும். ஒவ்வொரு மாதமும் மாதாந்திர இணைய இதழ்களை  வெளியிடுகிறது. வெளியாகும் ஒவ்வொரு இதழிலும் நிச்சயம் கலை – இலக்கிய படைப்புகள் மட்டும் இருக்கும் என்று உறுதியாக கூறிக் கொள்கிறோம். இதுவரை ஒன்பது இதழ்கள் மற்றும் ஒரு சிறப்பிதழை  கனலி வெளியிட்டுள்ளது. இது கனலி வெளியிடும் பத்தாவது இணைய இதழ். ஒவ்வொரு முறையும் படைப்புகளை படைப்பாளிகளிடம் பெற்று, அவற்றை ஆசிரியர் குழுவில் உள்ள நண்பர்கள் அனைவரும் வாசித்து சிறந்த படைப்புகளை தேர்வுச் செய்கிறோம். அந்த வகையில் இந்த பத்தாவது  இணைய இதழிலும் இலக்கியத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் படைப்புகளை வெளியிட்டுள்ளோம்.

பத்தாவது இணைய இதழில் புதிய பிரிவுகளாக  ‘கடித இலக்கியம்’ ,  ‘சிற்றிதழ்கள் அறிமுகம்’ எனும் இரண்டு புதிய பகுதிகளை இணைத்திருக்கிறோம். முக்கியமாக சிற்றிதழ்கள் அறிமுகம் என்கிற பகுதியின் நோக்கம் நல்ல தரமான இலக்கியச் சிற்றிதழ்களை  நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதாகும். மேலும், கடித இலக்கியம் பிரிவில் இரண்டு மிகச்சிறந்த கடிதங்களை கொண்டு வந்திருக்கிறோம். இவை இல்லாமல் எப்போதும் போல சிறந்த சிறுகதைகள், குறுங்கதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மற்றும் கவிதைகள், சிறார் இலக்கியப் படைப்புகள், நுண்கலைகள் என ஏற்கனவே சொன்னது போல  தரமான இலக்கிய படைப்புகள் பத்தாவது இதழில் உள்ளது.

இவற்றுடன் எழுத்தாளர், கவிஞர் மற்றும் தஞ்சை இலக்கிய மண்ணின் மைந்தர்களில் ஒருவரும், அந்த நிலத்தின் இலக்கிய வரலாற்றை இன்னும் நினைவுகளில் சுமந்து அலையும் நா.விச்வநாதன் அவர்களின் நேர்காணல் ஒன்றை வெளியிடுகிறோம். நேர்காணல் செய்தவர் எழுத்தாளர் கண்ணம்மாள் மனோகரன். அவருக்கு கனலி ஆசிரியர் குழு சார்பில் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கனலியின் மிக நீண்ட கனவுகளில் ஒன்றான தமிழிலக்கியப் படைப்புகளை அதிகளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வது என்கிற விடயத்தில், இந்த முறை மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் சிறுகதை ஒன்றும், ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் கவிதை ஒன்றையும் ஆங்கில மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் வெளியிடுகிறோம்.

தமிழிலக்கியச் சூழலில் தொடர்ந்து படைப்பாளிகள் மற்றும் வாசகர்களுக்கு  இடையே எப்போதும் கனலி அன்பின் பாலமாக இருக்கும் என்று உறுதியுடன் கூறிக் கொள்கிறோம். அதே நேரத்தில் இதுவரை எமது முன்னோடிகள் உருவாக்கி வைத்திருக்கும் இலக்கியத் தரம் என்கிற விடயத்திற்கு எந்த விதத்திலும் குறை வராமல் கனலி தொடர்ந்து இயங்கும்.

கனலி தனது ஒவ்வொரு இணைய இதழ்கள் வழியாக நவீன தமிழிலக்கியத்தை முடிந்தவரைக்கும் தனது ஒவ்வொரு வாசகர்களிடம் தீவிரமாக கொண்டுச் சேர்க்கும். இதனுடன்  ‘கனலி ஆசிரியர் குழு’ உங்களிடம் எதிர்பார்ப்பது ஆதரவு மட்டுமல்ல , கனலியில் வெளிவரும் படைப்புகள் மீது விமர்சனங்கள். இவை இரண்டு மட்டுந்தான் எந்தவித பொருளாதார மற்றும் பதிப்பக பின்புலம் இல்லாமல் இயங்கும்  எங்களுக்கு ஊட்டச்சத்தாக இருக்குமென்பதை அன்புடன் கூறிக் கொள்கிறோம்.

கனலி இணைய இதழை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

நன்றி !

கனலி ஆசிரியர் குழு.

தொடர்புக்கு:

அலைப்பேசி: +91 90800 43026

மின்னஞ்சல் : [email protected]


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.