பாமர மக்களின் கொண்டாட்டத் திருவிழா

மயானக் கொள்ளை

ஏழை எளிய மக்களின் கொண்டாட்டத் திருவிழா என்றால் அது மயானக் கொள்ளை விழாதான். அங்களாபரமேஸ்வரியின் ஆர்ப்பாட்டமான விழா என்றாலும், அந்த விழாதான் பாமர மக்களின் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றும் ஒரு மகத்தான விழா. மரத்தில் காய் காய்க்காவிட்டாலும், பிள்ளை வரம் இல்லாவிட்டாலும், திருஷ்டி, தீர்க்க முடியாத நோய்கள் தீர்க்கவும் எளிய மக்கள் ஓடிவருவது இந்த விழாவுக்குத்தான்.

மயானக்கொள்ளை சூறை என்பது இந்த விழாவின் சிறப்பம்சம். வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள் நிறைவேறினால் பழங்கள், காய்கள், மஞ்சள், கொழுக்கட்டை, கீரை, பிஸ்கட், சாக்லெட், வளையல் எனப் பல பொருள்களைக் கொண்டு வரும் பக்தர்கள், அதை மக்கள் கூட்டத்துக்கு நடுவே வீசி இறைப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் மயானத்தில் அங்காளியாய் ஆடிவரும் சாமியாடிகள், சுடுகாட்டு மண்ணால் செய்யப்பட்ட உருவத்தைக் கலைத்து, அதனுள் வைக்கப்பட்டிருக்கும் ஆட்டின் மாமிசம், குடல் போன்றவற்றை வாயால் கடித்து இழுத்து வீசுவார்கள். இதுவே மயானக்கொள்ளை சூறை எனப்படுகிறது. இங்கு கொள்ளை என்றால் பறிப்பது என்று பொருள் இல்லை. காளிதேவி அசுரசக்திகளை விரட்டுவது என்றே பொருள்.

 

தகவல் உதவி: விகடன்.காம்

[vc_gallery interval=”3″ images=”2784,2783,2780,2785,2778,2777,2776,2775,2782,2781,2779″ img_size=”medium” title=”மயானக்கொள்ளை”]
புகைப்படக் கலைஞர் :  சுவாமிநாதன் ராஜாமணி.
இடம்: கெடிலம் நதிக்கரை, கம்மியம்பேட்டை
கடலூர்
அங்காளி கோவில்
நிகழ்வு:வைகாசி அமாவாசையன்று மயானக்கொள்ளை.

Previous articleயான் காப்லின்ஸ்கி கவிதைகள்
Next articleகாவி- மொழிபெயர்ப்பு சிறுகதை
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments