Sunday, Aug 14, 2022
Homeமொழிபெயர்ப்புகள்மொழிபெயர்ப்புக் கவிதைதனேதா சேன்டோகா: எதிரே ஒரு சகே* கடை – தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்

தனேதா சேன்டோகா: எதிரே ஒரு சகே* கடை – தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்


ந்தக் கந்தல் துணியை விற்று

கொஞ்சம் சகே* வாங்கினால்

இன்னுமா இருக்கும் என் தனிமை


 

ருமையான விடுதி

சுற்றிலும் மலைகள்

எதிரே ஒரு சகே* கடை


 

ந்தக் கடைசிக் கோப்பை

சகே* குடித்து முடித்ததும்

காற்றின் இசை


 

சுமை

சகே* குடித்ததும்

மேலும் பசுமை


 

சூரியஸ்தமனம் வரைந்த வானம்

இப்போது ஒரு கோப்பை சகே*

மிக அருமையான சுவையுடன் இருக்கும்தானே


 

ந்தப் புத்தாண்டுதினத் தனிமை

சகே* இருக்கிறது மற்றும் மோச்சி** கூட

அப்புறம் …


 

ண்ணவும் குடிக்கவும்

எனக்கு இருக்கிறது

களை மீது பெய்யும் மழை


 

கே* இல்லை

நான் வெறித்துப் பார்க்கிறேன்

நிலாவை


 

ந்த சகே* விழுங்கும் போது

எழும் மிடறு ஓசை

என் மிகத் தனிமை

 


 

தி போதை

நான் தூங்கினேன்

கிரிக்கெட் பூச்சிகளுடன்

 


 

ன் பிச்சைப் பாத்திரத்தில்

விழுகின்றன

சில ஆலங்கட்டிகள்

 


 

நான் நனைந்துவிட்டேன்

மழையால்

அதோ அந்த மேகம் தான் பொழிந்தது


* ஜப்பானிய அரிசி மது

** ஜப்பானிய அரிசி இனிப்பு அப்பம்


தமிழில் : நந்தாகுமாரன்

ஆசிரியர் குறிப்பு:

 

தனேதா சேன்டோகா (Taneda Santōka) – (3 டிசம்பர் 1882 – 11 அக்டோபர் 1940)

 இயற்பெயர்: தனேதா சொய்ச்சி:

ஜப்பானியப் பாரம்பரிய ஹைக்கூ மரபு கட்டமைத்த விதிகளை மீறி ஆனால் ஹைக்கூவின் ஆன்மாவைத் தக்கவைத்து கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திர ஹைக்கூக்கள் எழுதிய ஜப்பானிய கவிஞர் சேன்டோகா. தன் அதீதக் குடியால் கவிதைக்கு வளம் சேர்த்தவர்.

ஜப்பானில் மிகப் பெரியதும், மக்கள் தொகை அதிகம் கொண்டதுமான ஹோன்ஷு என்னும் தீவின் ஒரு கிராமத்தில் ஒரு பணக்கார நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர். பதினோராவது வயதிலேயே தன் தாயைத் தற்கொலைக்கு இழந்தவர். அதற்குக் காரணம் அவர் தந்தைக்கு இருந்த பல பெண்களுடனான காமத் தொடர்புகள் எனப் பின்னாட்களில் தன் நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் சேன்டோகா. பிறகு தன் பாட்டியிடம் வளர்ந்த அவர், டோக்கியோவின் வசேதா பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படித்தார். அப்போது மதுவிற்கு அடிமையானார். தவிர அப்போது அவர் தந்தை தன் சொத்துகள் முழுவதையும் ஏறக்குறைய அழித்திருந்தார். இந்தக் காரணங்களால் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினார் சேன்டோகா. பிறகு தந்தையும் மகனும் மீதி இருந்த நிலத்தையும் விற்று ஒரு சகே* வடிப்பாலையை அமைத்தார்கள்.

1911-இல் அவர் எழுத ஆரம்பித்த போது அவர் சேன்டோகா எனும் புனைப்பெயரைத் தேர்ந்தெடுத்தார். அப்பெயருக்கு எரிதழல் மலை என்று அர்த்தம் வரும். அது சுடுகாட்டின் எரியும் சிறு மலைக் குன்றுகளையும் குறிக்கும். ஒகிவாரா செய்சென்சுய் எனும் ஹைக்கூ சீர்திருத்தவாதியிடம் மாணவராகச் சேர்ந்தார். செய்சென்சுய் சுதந்திர வடிவ ஹைக்கூ இயக்கம் தோன்ற மூல காரணமாக இருந்தவர். அதற்குள் அவர் அப்பா, அவர்களின் சகே கடையின் கெட்டுப் போன சரக்கால் கடை மூடப்பட்டு கடனாளியானார், தலைமறைவானார். அப்பாவின் ரெண்டாம் மனைவி இதனால் மனம் வருந்தி, தற்கொலை செய்து கொண்டார். சேன்டோகாவிற்குத் திருமணாமாகி அதன் மூலம் ஒரு மகனும் இருந்தார். பிறகு மனைவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதால் தன் மனைவியை விவாகரத்து செய்தார் சேன்டோகா. தன் மதுப்பழக்கத்தால் அவரால் எந்த வேலையிலும் தொடர்ந்து இருக்க முடியவில்லை. ஒரு முறை, ஓடி வரும் ரயில் முன் போதையில் தற்கொலைக்கு முயன்று குதித்தார். ஆனால் ரயில் நிறுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டார். மீண்டு வந்ததும் நிறைய நடைப்பயணங்கள் மேற்கொண்டார். சம்பக்கூ எனும் பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்தினார்.

அவரின் முதல் கவிதைத் தொகுதி ‘அரிசிக் கிண்ணக் குழந்தை’ 1932-இல் வெளியானது. தன் மகன் அனுப்பிய பணம், நண்பர்களின் உதவி மற்றும் தான் வாங்கிய தோட்டத்தின் விளைச்சலில் வந்தது எனத் தன் வாழ்வின் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளித்தார். பிறகு மீண்டும் ஒரு தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டார். 1940-இல் தூக்கத்தில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அவர் ஏழு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருந்தார். என் அனைத்து நடைகளுக்கும், மலையைச் சுவைத்தல், எரிதழல் மலை ஆகியவை இவரின் வேறு சில கவிதைத் தொகுப்புகள்.

ஜப்பானில் சேன்டோகா என்ற தொழிற்சின்னம் கொண்டு ஒரு சகே* பின்னர் உருவானது.

 

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

நந்தாகுமாரன்

கோவையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர் பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி ‘மைனஸ் ஒன்’, உயிர்மை வெளியீடாக டிசம்பர் 2012-இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி ‘நான் அல்லது நான்’, அமேசான் கிண்டில் மின்னூலாக ஃபிப்ரவரி 2019-இல் வெளியானது. ‘கலக லகரி: பெருந்தேவியின் எதிர்கவிதைகளை முன்வைத்துச் சில எதிர்வினைகள்’ எனும் வித்தியாசமான விமர்சன மற்றும் ரசனை நூல் அமேசான் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 2020-இல் வெளியானது.


Art Courtesy : CEKAPAPI 

பகிர்:
Post Tags
Latest comments
  • ஹைகூக்கள் அருமை
    மொழிபெயர்ப்பாளருக்கு
    வாழ்த்துகள் நன்றி

  • நன்றி

    நந்தாகுமாரன்

leave a comment

error: Content is protected !!