Tag: மொழிபெயர்ப்பு

நவீன உரைநடைக்கான கெருவாக்கின் கருத்தும் கலைநுணுக்கத் திறமும்- ஆலன் கின்ஸ்பர்க்.

ஜாக் கெருவாக் (Jack Kerouac) தன்னுடைய படைப்பாற்றலுக்குப் பயன்படுத்திய எழுதும் முறை மற்றும் முப்பது சூத்திரங்களைப் பற்றி முன்பு கூறியதை நான் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். திரைப்பட நடிகர் டான் ஆலனுக்காக (Don Allen)...

டேனில் கார்ம்ஸ் குறுங்கதைகள்.

1.ஒரு சந்திப்பு ஒரு காலத்தில் ஒரு மனிதன் பணிபுரிதல் பொருட்டு வெளியே சென்று கொண்டிருந்தான் வழியில்  போலிஷ் ரொட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் மற்றொரு மனிதனை அவன் சந்தித்தான். இவ்வளவுதான் இதைப்பற்றிச்  சொல்ல இயலும். 2.ஒரு...

நத்தை சேகரிப்பு

“நத்தைகள் சேகரித்தால் என்ன?”  ஸ்டானுக்குதான் இந்த அற்புதமான யோசனை உதித்தது. ஐந்து குழந்தைகள் உள்ள அந்த வீட்டில் சேகரிப்புப் பழக்கம் ஒன்றும் புதிதில்லை.  பிரவுன் தம்பதியைப் பார்க்க விருந்தினர் யாராவது அவர்களுடைய வீட்டுக்குப் போனால், நாற்காலியில்...

ஈவ் என்ஸ்லரின் கடிதம்

வஜைனா மோனலாக்ஸ் (Vagina Monologues) நாடகம் அறிமுகமாவதற்கு முன்புவரை ஈவ் என்ஸ்லர் என்ற பெயரை யாரும் அறிந்திருக்கவில்லை. தி நியூயார்க் டைம்ஸ் இந்த நாடகத்தை அந்தப் பத்தாண்டுகளில் வந்த மிகச்சிறந்த அரசியல் நாடகமாகக்...

ஹென்றி லாஸன் கவிதைகள்

எழுதப்படாத புத்தகங்கள் எவ்வளவு உச்சம் தொட்டு வாழ்ந்தாலும் முடிவிலென்னவோ அதே கதைதான் நம்முடைய ஆகச்சிறந்த புத்தகத்தை எழுதாமலேயே சாகப்போகிறோம் நம் வாழ்வின் மிகச்சிறந்த செயலை செய்துமுடிக்காமலேயே மடியப்போகிறோம் எழுதப்படாத புத்தகங்கள் வரையப்படாத ஓவியங்கள் இந்த வானுக்குக் கீழே எத்தனை எத்தனை… பதிப்பிக்கப்படாத நம் ஆகச்சிறந்த சிந்தனைகளோடு நாமும் ஒருநாள் இவ்வுலகை விட்டு...

தினா நாத் நதிம் கவிதைகள்

1. உடைந்த கண்ணாடி ஒன்று உதவாப் பொருளாய் வீசப்பட்டது ஒரு மாடு அதை உற்றுப் பார்த்தது நாய் ஒன்று வந்து அதன் மீது மூச்சுவிட்டது மனநிலை பிறழ்ந்த ஒருத்தி அக்கண்ணாடியை எடுத்து அவளின் கந்தலாடையில் சுற்றிக்கொண்டாள் அதற்குப் பிறகு யாருக்கும் தெரியாது அந்தக் கண்ணாடிக்கு என்ன நேர்ந்ததென்று 2. ஒரு மண் பாத்திரம் மழைத்துளிகளால் கழுவப்பட்ட பின்பு பெண்ணின்...

கதை சொல்பவன் ஒரு ரகசிய பயணி

-குந்தர் கிராஸ் (1999) நோபல் பரிசு ஏற்புரை. தமிழில் : ஜி.குப்புசாமி மதிப்புமிகுந்த ஸ்வீடிஷ் அகாதெமியின் உறுப்பினர்களே, சீமாட்டிகளே, கனவான்களே: இந்த அரங்கும், என்னை இங்கு அழைத்திருக்கும் ஸ்வீடிஷ் அகாதெமியும், எனக்கு அந்நியமானவர்களில்லை. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு...

கலைஞனின் கடமை குறித்து ஆல்பெர் காம்யு

 சமூகத்தின் அரசியலில் படைப்பார்வத்தின் பங்கினைக் கலைஞர்கள் சந்தேகிக்கக்கூடாது -ஆல்பெர் காம்யு (Albert Camus) கீழைதேசத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவர் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம்  அவரது தெய்வத்திடம் ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில் வாழ்வதிலிருந்து அவருக்கு விலக்களிக்குமாறு மன்றாடுவதை...

ஜிபனானந்த தாஸ் கவிதைகள்

வங்காள மூலம் : ஜிபனானந்த தாஸ் ஆங்கிலம் : சிதானந்த தாஸ் குப்தா தமிழில் : கு.அ.தமிழ்மொழி எனக்குப் பெயரிடுங்கள் எனக்குப் பெயரிடுங்கள் சிறந்த, எளிய, வான் போல் பரந்த சொல்லால் எனக்குப் பெயரிடுங்கள் அந்தச்சொல் நான் என்றென்றும் நேசிக்கும் பெண்ணின் நன்கறிந்த கைபோல...