உலகின் மிகப் பெரிய பொய்யர்!


கொட்டும் மழையில் தெருவின் நடுவில் நின்று கொண்டிருக்கும் அவர் குளிரவில்லை என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்குளிர் உறைநிலைக்கு அருகில் இருந்தாலும் அவர் தும்மக் கூட இல்லை. வியர்வைத்துளி போல அவரது நெற்றியிலிருந்தும், வாயிலிருந்தும் மழைத்துளி வழிந்து கொண்டிருந்ததுஅதை நம்புவதற்கு கண்டிப்பாக நீங்கள் அதைப் பார்க்க வேண்டும்: அவருடைய வாய் உண்மையானவொரு அண்ட வெளிப்பாடாக, யதார்த்தத்தில் உறிஞ்சி இன்னொரு பக்கம் முற்றிலும் வேறாக துப்பும் ஒரு கருந்துளையாக இருந்ததுஇப்போது அவர் நம்முடைய குழந்தைகளுக்காகக் காத்திருக்கும் அருமையான எதிர்காலம் பற்றியும் யாராவது கேட்பதற்கு விரும்பினால் அவர்களுக்கு அவர் கடவுள் இருப்பதையும் அவர் நாமெல்லாம் நன்றாக இருக்கிறோம் என நம்புவதையும் எந்த நிமிடமும் விளக்கிச் சொல்லக்கூடும். அதன்பின் அவர் சிறிய உணவகத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்து எலுமிச்சை கலந்த சூடான தேநீர் அருந்தினாலும் அதை காபி என்று சத்தியம் செய்வார்.  

அவர் எப்போதும் இப்படியிருந்ததில்லை. அவர் குழந்தையாக இருந்தபோது அவரால் பொய் சொல்ல முடியவில்லை, ஒரு முறை வகுப்பறையில் சன்னல் உடைந்தபோது தன்னுடைய கையை உயர்த்தி தான் தான் கல்லை விட்டு எறிந்ததாக ஒப்புக் கொண்டார். ஆனால் அவருடைய இந்த நேர்மையெல்லாம் பதின்மவயதில் அவர் சொத்தை சேதப்படுத்தினார் என்பதாகப் பதிவாகியிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த நீண்ட முடிவுறப் போகிற சாலையின் சந்திப்பை அடைந்து ஊசிமுனையில் திரும்பியபின் ஒருபோதும் பின்பக்கம் பார்க்கவில்லை.  

முதலில் அவர் தெரியாதவர்களிடம் மட்டும் பொய் சொன்னார், அதன் பின் அவர் உண்மையிலேயே நேசிப்பவர்களிடம் சொன்னார், இறுதியாக அவருக்குள்ளே சொல்லிக் கொண்டார். உங்களிடமே பொய் சொல்லிக் கொள்வது சிறப்பானதாகும். உங்களுடைய சாக்ஸை ஈரமாக்குவதற்கும் அதை வெதுவெதுப்பாகவும், மென் துணியாகவும் மாறுவதற்கு யதார்த்தத்தின் மங்கலான தேங்கிய நீருக்கு ஒரு நிமிடம்தான் ஆகும். ஒரு வரி மட்டும்தோல்வி தன்னார்வ சமர்ப்பிப்பாகவும், தனிமையைத் தெரிவாகவும், உங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் மரணம் கூட சொர்க்கத்துக்கான ஒருவழி பயணச்சீட்டாக மாறலாம்

அவர் ஒன்றும் அப்பாவியில்லை. அவரை எல்லோரும் பாராட்டமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். கற்பனை செய்யமுடியாத உண்மையை ஏதோவோர் அற்புதம் போலவும் ஒரு சங்கடமான இயல்பு நிலை போலவும் புகழ்ந்து பேசும் தீவிரவாதிகள் எப்போதும் இருப்பார்கள். குப்பைக் குவியல் அல்லது தலைப்பிரட்டை அல்லது ஏதேனும் பூச்சியொன்று பொய் சொல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? படைப்பின் உச்சமான மனிதனுக்குத்தான் ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உலகத்தை மாற்றும் திறன் இருக்கிறது. வாக்கியம் யதார்த்தத்தை உருவாக்கும். சரி, ஒருவேளை யதார்த்தமில்லாத வேறொன்று. ஏதாவதொன்றை இறுக்கிப் பிடித்தால் மட்டுமே தப்பிப் பிழைத்து மிதக்க முடியும்

இப்போது அவருடைய நடவடிக்கையைக் கவனிப்போம். அவருக்கு வலது பக்கம்மனைவியும் அவர் மிகவும் நேசிக்கக்கூடிய இரண்டு குழந்தைகளும் இருந்தனர். அவருக்கு இடது பக்கம்சர்வதேச உறவில் பட்டம் வாங்க விருப்பமுள்ள ஒரு மெல்லிய, இளம் பணிப்பெண் இருந்தாள். அவர் அவளை முத்தமிட்டதோடு அதில் எதுவும் தவறில்லை எனவும் கூறினார். அதன்பின் அவர் மழலையர் பள்ளியில் படிக்கும் இரட்டையர்களைத் தூக்கி அம்மாவும் அவரும் அவர்களை எப்படி இந்த உலகிற்கு கொண்டு வந்தார்கள் எனக் கூறினார். உடலுறவுக்குப் பிறகு புகைப்பதற்கு ஒரு நிமிடம் இருக்கையில், அந்த மெல்லிய பணிப்பெண்ணுக்கும் அவருக்குமான இது போன்ற காதல் தருணத்தை ஒருபோதும் அனுபவித்ததில்லை என்று கூறினார். காதல் என்பது இயற்கையின் சக்தி, சூறாவளி ஏதாவது ஒரு பக்கம் உங்களைத் தூண்டுகையில் அதை எதிர்ப்பது பயனற்றதாகும்

இப்போதிலிருந்து இரண்டு மாதங்கள், பெட்டாக் டிக்வாவில் இருக்கும் வாடகைக் குடியிருப்பில் சோர்வோடு ஒவ்வொரு வார இறுதிக்கும் பொறுமையில்லாமல் காத்திருக்கும்போது இரட்டையர்களுக்குப் பக்கத்தில் படுக்கையில் தூங்கவும் குற்ற உணர்வு கொண்ட கனவு காணவும் முடிந்ததுஅவர் அவரோடு தொடர்பில் இருந்ததால் தான் இவையனைத்தும் நடந்தது என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருவார். ஏனென்றால் அந்த மெல்லிய பணிப்பெண் ஆர்ட் ஹவுஸ் சினிமாவுக்கு இழுத்துச் சென்று பார்க்கச் செய்தது போல இன்னொரு வெளிநாட்டுப் படத்தை ஒதுங்கி நின்று சிரமப்பட்டு பார்க்காமல் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு அவர் தெரிவு செய்திருந்தார்

இந்த செப்டெம்பர் மாதம் அவர் உலக பொய் சாம்பியன்ஷிப்பில் நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு மெடலையும் பெற்றுக் கொண்டு வருவார் என வர்ணனையாளர்கள் நேர்மறை எண்ணம் கொண்டிருந்தனர். அவர் மிகவும் சிறப்பாக செய்யக்கூடியவர், சாத்தியமற்றது நடந்து அவர் தோல்வியுற்றாலும் கூட அவர் தான் வெற்றி பெற்றார் என்று அவரையும் நம்மையும் அவரால் சமாதானப்படுத்தமுடியும் என்பதில் சந்தேகத்துக்கான நிழல் கூட இல்லை என அவர்கள் கூறினார்கள். ஏனென்றால், அவர் அப்படித்தான்: அவர் சாம்பியன்ஷிப்புக்கானவர். பரிசின் மீது அவர் கண் வைத்திருப்பார். உண்மை கருமையாக இருந்தாலும் அது இளஞ்சிவப்பு என்று சொல்வதற்கு ஒருபோதும் பயப்படமாட்டார். ஒருபோதும் எதற்கும் வருத்தப்படாத மனிதர்அப்படியே வருத்தப்பட்டாலும் அதை ஒருபோதும் ஒத்துக் கொள்ளமாட்டார்.


எட்கார் கெரெட் (Etgar Keret)

தமிழில்:  சித்தார்த்தன் சுந்தரம்

[ads_hr hr_style=”hr-fade”]

[tds_info]இஸ்ரேலிய எழுத்தாளரான எட்கார் கெரெட் (Etgar Keret) எழுதி ஜெசிகா கோஹென் (Jessica Cohen) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து லிட்ஹப்.காம் இணையதளத்தில் செப்டெம்பர் 6 அன்று பதிவேற்றப்பட்ட “The Greatest Liar in the World” என்கிற சர்ரியலிச `குறுங்கதை (micro story)’யின் தமிழாக்கம்.[/tds_info]

 

ஆசிரியர்கள் குறிப்பு:

[tds_note]

மொழிபெயர்ப்பாளர்:

சித்தார்த்தன் சுந்தரம்இதுவரை சுமார் 15 நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர். இதில் மால்கம் க்ளாட்வெல் எழுதிய டிப்பிங் பாயிண்ட், ப்ளிங்க், அவுட்லையர், டேவிட்&கோலியாத் ஆகியவையும், ஹார்ப்பர் லீ எழுதிய `To Kill a Mockingbird’ம், நோபல் பரிசு பெற்ற ஸ்வெட்லான அலெக்ஸியேவிச் எழுதிய `Voices from Chernobyl’ம் அடங்கும். இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

[/tds_note]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.