வெட்சி


வெட்சி

காலாண்டிதழ்

மொழி வரையும் தடம்

டைப்பிலக்கியத்தையும் தமிழாய்வையும் வளர்த்தெடுப்பதற்கான களமான வெட்சி இதழ் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆய்வாளர்களாலும், மாணவர்களாலும் இணைந்து இதழ் நடத்தப்படுகின்றது. முதலில் திங்களிதழாகத் தொடங்கப்பட்டு தற்போது காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழ்ச்சூழலில் அறியப்படாத கலை, பண்பாட்டு, இலக்கிய ஆளுமைகளையும், படைப்புகளையும் வெளிக்கொணருவதும் விளிம்புநிலை (திருநநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், நாட்டார் இலக்கியங்கள், பழங்குடி எழுத்துகள், அவை குறித்த உரையாடல்கள்) சார்ந்த படைப்புகளையும் உரையாடல்களையும் பேசும் களமாக மாற்றுவதே இதழின் தற்போதைய நோக்காக உள்ளது. இன்னும் இதழை இதன் அடிப்படையில் செழுமைப்படுத்த வேண்டியிருக்கின்றது. தமிழாய்வுப் போக்கு சீர்குலைந்துவரும் சூழலில் தரமான, செறிவான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுவதும் அதன் மீதான விவாதங்களை ஏற்படுத்துவதும் இன்றைய தேவையாகவுள்ளது. அதனை ஓரளவு இதழ் செய்துவருகின்றது. படைப்பிலக்கியம் சார்ந்தும் தமிழாய்வும் சார்ந்தும் மாதத்திற்கு இரண்டு இணைய வழி உரையாடல்களை இதழின் திணைக்களம் (செயற்குழு) நிகழ்த்திவருகின்றது.

தனிஇதழ் : ₹ .60.00

இதழ் கிடைக்குமிடம்:

நி.கனகராசு,

2190, சுந்தரகவுண்டனூர்,

பூசாரிபட்டி (அஞ்சல்) – பொள்ளாச்சி (வ)

கோயம்புத்தூர் – 642205


தொடர்புக்கு:

+91  6374663016

[email protected]

வெட்சி இதழுக்கான திணைக்களம் –

 http://vetchiidhal.blogspot.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.