அகச்சேரன் கவிதைகள்


 

1) தேட்டம்

 

பாறைகளை வெட்டி வெட்டிச் சமைத்த

மலைப்பாதையில் மேலேறுகிறேன்

சிதைக்கப்பட்ட பக்கவாட்டுப் பாறைகள்

தம் ஹீனஉடல்களால் பள்ளத்தாக்கை நோக்குகின்றன

சாலையைப் பொருட்படுத்தியதாகத்

தெரியவில்லை.

 

●●●

 

செத்தவன் பிழைத்தானெனில்

சங்கொலி நிறுத்தம்

சங்கொலி நின்றிடிலோ

சடங்குகள் முடக்கம்

சடங்குகள் முடங்கியபின்

மலர்பாடை கலைப்பு

பாடை கலைந்த பின்னர்

திரண்டவர் தளர்நடை

திரண்டவர் சென்ற தன்பின்

ஏங்குமொரு வெட்டுகுழி

 

●●●

 


  • அகச்சேரன்

1 COMMENT

  1. ..
    திரண்டவர் சென்ற தன்பின்
    ஏங்குமொரு வெட்டு குழி.

    மிகக்கச்சிதமான வரிகள், வாழ்த்துக்கள் நண்பா..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.