கனலி 15வது இணைய இதழ்.

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,

கனலி-யின் 15வது இணைய இதழ் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.15வது இதழ் என்பதை ஒரு முக்கியமான இதழாகத் தான் பார்க்கிறேன். காரணம் தீவிர இலக்கியச் செயல்பாடுகள் என்பதன் மீதான வெகு மதிப்புகள் வேகமாகக் குறைந்து வரும் இந்த காலச்சூழலில் எந்தவித சமரசம் செய்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் ஒரு இலக்கிய இணையதளம் தீவிரமான இலக்கியச் செயல்பாடுகளை நோக்கி நகர்வது என்பது ஏறக்குறைய தனக்கு தானே மூடு விழாவை நடத்திக் கொள்வதற்குச் சமம். நுகர்வு கலாச்சாரத்திற்குத் தன்னை முழுவதும் உட்புகுத்திக் கொள்ளாமல். வணிக வெற்றிகள் போன்ற நடைமுறை சாத்தியங்களைப் புறக்கணித்துத் தொடர்ந்து முன்னேறிச் செல்ல விரும்பும் இதழாகத் தான் கனலி என்றும் இருக்க விரும்புகிறது. இலக்கியம் என்கிற கருத்தியலை வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்க்க எவ்வகையிலும் இங்கே சாத்தியக்கூறுகள் இல்லை. இலக்கியம் என்பது தொடர்ந்து ஒரு சிறு கூட்டத்தால் மட்டும் வாசிக்கப்பட்டும் நேசிக்கப்பட்டும் வருகிறது. இந்தச் சிறுவட்டத்தின் பரப்பை எந்தவித சந்தை அபாயத்திலும் சிக்காமல் கனலி விரிவுபடுத்த விரும்புகிறது. போராட்டம் என்பதே நவீன வாழ்க்கை என்றாகிவிட்ட சூழலில் இலக்கியத்திலும் அதுவே நடைமுறையாக இருக்கிறது. கனலியின் கனவுகள் எல்லாம் வேறு ஒன்றுமில்லை எங்களுக்குப் படைப்புகளைத் தந்து ஊக்குவிக்கும் அத்தனை படைப்பாளிகளுக்கும் எப்படியாவது எந்தவகையிலாவது திரும்ப நன்றிக் கடன் செய்வது. அதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். நிச்சயம் எதிர்காலத்தில் அதை எப்படியாவது செய்து முடிப்போம் என்கிற எண்ணம் மனதில் இருக்கிறது.

கனலி 15வது இதழ் நல்ல இலக்கியப் படைப்புகளால் நிரம்பியிருக்கிறது. நேர்காணல் முதல் சிறார் இலக்கியம் வரை படைப்புகள் உள்ளடங்கிய ஒரு இணைய இதழாக இந்த 15வது இதழை வெளியிடுகிறோம்.

கனலியின் அடுத்தடுத்த இதழ்களின் அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். வரப்போகும் அத்தனை இதழ்களும் இன்னும் சிறப்பாக அமையப் படைப்பாளிகளும், வாசகர்களும் எப்போதும் போல உங்களது ஆதரவுகளைத் தந்து உதவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


என்றும் அன்புடன்.

க. விக்னேஸ்வரன்.

கனலி

கலை இலக்கியச் சூழலியல் இணையதளம்.


தொடர்ந்து எழுதுங்கள். எழுதுபவருக்கு அமையும் விடுதலை ஒன்றுண்டு.

ஜெயமோகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.