Sunday, Jun 13, 2021
Home2021April (Page 2)

“என்ன ஆச்சு?” அவள் கேட்டாள். “எனக்குத் தெரியலை,” சிரிக்க முயன்றபடி சொன்னான். “நான் கொஞ்சம் சோர்வாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.” “நீங்கள் உங்கள் வேலையில் மிகக் கடினமாக உழைக்கிறீங்க” என்று

அன்றைய தினம் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் நேசநாடுகளிடம் சரணடைந்த இரண்டாவது ஆண்டு நினைவுநாளுக்கு முந்தைய நாள். பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் முன்னாள் சட்ட ஆலோசனை மன்றத்தின் உயர்ந்த

வராகமங்கலம் என்ற ஊர் இன்று இல்லை. முண்டையான கூரையற்ற வீடுகளும், இடுப்பளவு வளர்ந்த நாணல் புதரும் மட்டுமே ஊர் என்ற ஒன்று அங்கே நின்றதற்கான சான்றாக இன்று

நான் “எறியுங்கள்” எனச் சொன்னபோது எனது உணவகத்தின் சமையல் தலைவன் “ஏன்?” எனத் தனது  வெள்ளைச் சிரிப்பால்  என்னைக் கேட்டான். “இறைச்சியினது மணம் என்னை வாந்தி எடுக்க வைக்கின்றது.” “இதனை

சூரியன் மேலெழுந்து வருவதைப் பார்த்ததும் நீலாவுக்குத் திகீரென்றிருந்தது. நீல திரைச்சீலையை விலக்கிவிட்டு, நான் வந்தே தீருவேன் என்பது போன்ற பிரவேசம். ரத்தக்கோளமொன்று உருண்டு, திரண்டு உயிர்ப்புடன் நின்றிருப்பது

“அப்ப ராவைல 10 மணிக்கு இங்க இருந்து மாட்டு வண்டிலக் கட்டுவம்.  அஞ்சாறு வண்டிகள். ஒரு வண்டி நெறய சாமான். ரெண்டு வண்டில ஆம்புளயல். மத்த வண்டிகள்ல

பிரதீப் இளங்கோவன் அப்பெரிய கட்டிட அலுவலகத்தில், கண்களை விழுங்கிக்  கொண்டிருக்கும் கணினி இயந்திரங்களுக்கும் காத்திருக்கும் இரண்டு விடுமுறை நாட்களை எண்ணிக் கொண்டு கனவுலகில் ஆழ்ந்திருந்த என்னை  அமோதித்தவர்களுக்கும்

உள்ளூர் இன்ஸ்பெக்டர், உள்ளே வந்து சல்யூட் அடித்தார். ”அய்யா, அந்தாளை விசாரிச்சுட்டேன். பேரு டேனியல் தங்கதுரை தான். ஒரு பழைய லாரி வச்சுருக்காரு. திருட்டு மணல் ஓட்டுறாரு.

கற்களால் உணரயியலுமா? கற்களால் உணரயியலுமா? அவர்கள் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்களா? இல்லை அவர்களின் நிதானம் எல்லாவற்றையும் அமைதியடையச் செய்துவிடுமா? நான் கடற்கரையில் நடக்கும்போது வெள்ளை நிறத்தில், கறுப்பில் எனப் பல வண்ணங்களில் சிலவற்றைச் சேகரிக்கிறேன். கவலைப்பட வேண்டாம், நான் உன்னைத் திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறேன் பிறகு அவ்விதமே செய்கிறேன். மரம் தனது பல கிளைகளை உயர்த்தி உவகையடைகிறதே, ஒவ்வொரு கிளையும் ஒரு கவிதையைப்போலவா? முகில்கள் தங்களது மழைமூட்டையை அவிழ்த்துவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றனவா? உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள், இல்லை, இல்லை, அது சாத்தியமேயில்லை என்று. நான் அத்தகைய முடிவை எண்ணிப்பார்க்கவே மறுத்துவிட்டேன். ஏனெனில் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும், மேலும் தவறாகவும். ** நான் கடற்கரைக்குச் சென்றேன் நான் காலையில் கடற்கரைக்குச் சென்றேன் நேரத்திற்கேற்ப அலைகள் வந்துபடியும் சென்றபடியும் இருந்தன, ஓ, நான் சோகமாக இருக்கிறேன் என்ன செய்யட்டும்— நான் என்ன செய்ய வேண்டும்? என்கிறேன். தன் அழகிய குரலில் கடல் சொல்கிறது: மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கிறது. ** எப்போது அது நிகழ்ந்தது? எப்போது அது நிகழ்ந்தது? “நிறையக் காலத்திற்கு முன்பு” எங்கு நிகழ்ந்தது? “தூராதி தூரத்தில்” இல்லை, சொல், எங்கு நிகழ்ந்தது? “எனது இதயத்தில்” இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது உனது இதயம்? “நினைத்துப்பார்த்த படியிருக்கிறது, நினைத்துப்பார்த்தபடியிருக்கிறது!” **   இந்தக் காலையில்  இந்தக் காலையில் செங்குருவிகளின் முட்டைகள் பொரிந்துவிட்டன மேலும் ஏலவே குஞ்சுகள் உணவுக்காகக் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்குத் தெரியாது உணவு எங்கிருந்து வருகிறது என்று, வெறுமனே