ம. நரேந்திரன் - மென்பொருள் துறையில் பணிபுரியும் இவர் கோவையில் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் தொடர் வாசிப்பும் ஆர்வமும் கொண்டவர். இவரின் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் திரு. ஜெயமோகன் தளத்திலும் கனலி, சொல்வனம், யாவரும்.காம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. இவரின் தமிழாக்கத்தில் சமகால ஆங்கில சிறுகதைகளின் தொகுப்பு - ‘இந்தக் கதையைச் சரியாகச் சொல்வோம்’ யாவரும் பதிப்பகத்தாரால் 2020இல் வெளியிடப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றது. புலம் பெயரிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கதைகளின் மூலமாக முதன்மையான சமகால ஆங்கில சிறுகதை ஆசிரியர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.