சித்தார்த்தன் சுந்தரம்

Avatar
9 POSTS 0 COMMENTS
மதுரையைச் சேர்ந்த சித்தார்த்தன் சுந்தரம் மேலாண்மைத் துறையில் முதுகலை பட்டம் (எம்.பி.ஏ) பெற்றவர். 2014 ஆம் ஆண்டு வரை பன்னாட்டுச் சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்றில் இயக்குநராக பணிபுரிந்து வந்தவர். இப்போது ஒரு சிறு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.வணிகம், மேலாண்மை, சந்தைப்படுத்தல் சம்பந்தமான புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இதுவரை பதினைந்து புத்தகங்கள் அச்சில் வந்துள்ளன. இன்னும் ஐந்து புத்தகங்கள் கூடிய விரைவில் வெளிவரவிருக்கின்றன. இவர் மொழியாக்கம் செய்த புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை: மால்கம் கிளாட்வெல் எழுதி விற்பனையில் சாதனை ஏற்படுத்திய `டிப்பிங் பாயிண்ட்’, `அவுட்லையர்’, `ப்ளிங்க்’, காமத் ஹோட்டல் புகழ் விட்டல் வெங்கடேஷ் காமத் அவர்களின் சுய சரிதமான ‘ இட்லி, ஆர்கிட், வில்பவர்’,சுப்ரதோ பாக்‌ஷியின் புத்தகங்கள், ஜெ.டி. சாலின்ஜெர், ஹார்ப்பர்லீ ஆகியோருடையநாவல்கள்.பிரபல ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகைகளில் சில்லறை வணிகம், சந்தை ஆய்வு,நுகர்வோர் கலாச்சாரம் பற்றி கட்டுரைகள் எழுதுவதுடன் புத்தக விமர்சனமும் செய்து வருகிறார். மொழியாக்கத்துக்காக 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் `கலைஞர் பொற்கிழி விருது’ பெற்றவர். தற்சமயம் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்புக்கு; sidvigh@gmail.com