க.மோகனரங்கன் கவிதைகள்

1)அணுக்கம் எனது ஆயுள் பரியந்தம் நீந்தினாலும் கடக்கமுடியாத கடலுக்கு அப்பால் அக்கரையில் நிற்கிறாய் நீ நினைத்தால் நிமிடங்களில் நீர்மேல் நடந்துவந்து காணும்படிக்கு இதோ இக்கரையில்தான் இருக்கிறேன் நான். 2) பிராயம் அப்படியேதான் இருக்கிறாய் என்பது அம்மா எவ்வளவோ மாறிவிட்டேன் என்கிறாள் மனைவி தொட்டுப்பேசக் கூசுகிறான் வளர்ந்துவிட்ட மகன் நீயே பார்த்துக்கொள் என்று காதோர நரையைக் காட்டுகிறது கண்ணாடி இடுப்பிலிருந்து இறங்கப் பார்க்கும் கால்சட்டையை ஒரு கையால் இழுத்துப் பிடித்தபடி மறுகையால் பையில் உருளும் கண்ணாடி கோலிகளைத் தொட்டெண்ணும் சிறுவன் எனது விரலுக்குச் சிக்கியும் மனதுக்குத் தப்பியும் நடுவில்...

நீயாகப்படரும் முற்றம்

விரவிக் கிடக்கும் சடைத்த மர நிழல்கள்… ரயில் தண்டவாளத்தை இரு கோடாக முதுகில் கீறிய அணில் குஞ்சு, என் சித்திரத்திலிருந்து தப்பித்த தும்பிகள் படபடக்கும் வண்ணாத்திப்பூச்சி,பொன் வண்டு வேலியோர தொட்டாச்சிணுங்கி. குப்பை மேனிச் செடி இணுங்கும் சாம்பல் பூனை… இறைந்துகிடக்கும் சருகு, நான் கூட்டக் கூட்ட இலைப்பச்சையாகி வளர்கிறது! யாரோ வெயிலைப் பிய்த்து துண்டு...

மன்னிக்கவும்.

மன்னிக்கவும் இதை சொல்வதற்குள் எனக்கு 38 வயது ஆகி விட்டது. மன்னிக்கவும் முலை விடாத வயதில் உனக்கு உலகத்திலேயே யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு காட்பரீஸை மென்றுக்கொண்டே சித்தப்பா என்று சொல்லியிருக்க கூடாது தான். மன்னிக்கவும் அன்று ஏதோ சடங்குக்கு ஊருக்குப் போன சித்தியுடன் கூடவே தொற்றிக்...

அதிரூபன் கவிதைகள்

1. நொய்யல் ஆறே நொய்யல் ஆறே (அ) தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி வாசனை மரங்கள் நீரில் பேசிவரும் ரகஸிய மூச்சின் இழை அதன் நாமத்தை அழைக்கும் உடம்பின் உப்பு சிற்றாற்றுப் பொடிகளை உணவில் தூவி காட்டைத் திரிக்க பெரிய...

வ.அதியமான் கவிதைகள்

1. வெந்து தணியாத ஒரு காடு சொல் இன்னும் எவ்வளவு நேரம் இந்தப் புல்லாங்குழலை இப்படி வாசித்துக்கொண்டே இருக்கப்போகிறாய்? சொல்கிறேன் இந்தப் புல்லாங்குழல் மீண்டும் மூங்கில் மரமாய்த் திரும்பும் வரைக்கும் அம்மரம் மூங்கில் புதராய்ச் செழிக்கும் வரைக்கும் அப்புதர் மூங்கில் வனமாய்ப் பெருகும் வரைக்கும் அவ்வனத்தின் பச்சையை கருங்குயில் ஒன்று உச்சியில் அமர்ந்து கூவும் வரைக்கும் 2. குலசாமி வேகவேகமாய் படியிறங்கிக்...