கவிதைகள்

சுஜய் ரகு கவிதைகள்

1 பித்தானவள் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தாள் ஒரு பஸ் நிறுத்தத்திற்கு முன்னால் கிடந்ததாக எல்லோரும் சொன்னார்கள் அதைக் கேட்டு அவள் வெடித்துச் சிரித்தாள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து சிரித்தாள் சொன்னவர்கள் ஒருசேரத் திரும்பிப் பார்த்தார்கள் ஒன்றுமேயில்லை அங்கும் அதே வெடித்த சிரிப்பு   2 "ஊரே காலியாகிவிட்டது .." எறும்புகளின் தலைவன் சொன்னான் தலைவி சிவந்த கொடுக்கு கொண்டு அவனை...

ஜீவன் பென்னி கவிதைகள்.

கடைசிப் பெட்டியின் வாசலில் உலகைச் சாய்த்து வைத்திருப்பவன். ஒவ்வொரு இடப்பெயர்தலிலும் அதற்கு முன்பான வாழ்வை அங்கேயே விட்டு விட்டு வருகின்றவன், எல்லோராலும் தான் நேசிக்கப்படுவதன் காரணங்களில் சிறிய ஒன்றையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறான்.!   1. ஒரு குற்றத்தின் முன்பாக வெகுநேரம் அமர்ந்திருப்பவன் தன் கைகளின்...

காதலிழந்த காலத்தின் இசை

ஓர் இரவோ நெடும்பகலோ நாம் காதலின் பிள்ளைகள் இவ்விரவோ நெடுநாள் கோடையோ நாம் காதலின் பிள்ளைகள் பொழுதின் நெடும்பாதை நீண்டாலும் இரவின் சிறுநொடிகள் ஆலங்கட்டிகளாய் விண்மீன் மெழுகிய தரைகளில் விழுந்தாலும் பருவகாலங்களின் மலர்கள் புதுப்பிறப்பின் ஓசைகளை எழுப்பினாலும் சங்குகளின் உள்ளே...

நகுலன் கவிதைகள்

காத்த பானை காத்த பானை கொதிக்காது கரும்பு கசக்காது வேம்பு இனிக்காது என்றாலும் என்ன செய்தாலும் என் மனமே வந்தபின் போக முடியாது போனபின் வர முடியாது என்றாலும் என்ன செய்தாலும் என்றென்றே சொல்லிச் சலிக்கும் என் மனமே ஊமையே உன்மத்த கூத்தனே வாழ ஒரு வழி சாக ஒரு மார்க்கம் சொல்லவல்ல...

தினகரன் கவிதைகள்

1. பரபரப்பு மிகுந்த இந்த வாழ்வில் ஏதோவொரு சாலையின் ஓரத்தில் காத்திருக்கிறான் கல்யாணசுந்தரம் சிக்னலின்/ வாழ்வின் பச்சை விளக்கிற்காக. அது விழுவதாயில்லை மாறாக, சட்டைப் பாக்கெட்டிற்கு சற்று மேலே விழுகிறது ஒரு பறவையின் எச்சம் எப்படியோ, பறவைக்குத் தெரிந்திருக்கிறது விரிசலடைந்த இடங்களை! 2. தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது: வெகுநேரமாக் கவிழ்ந்து படுத்தபடியே இருக்கிறேன் உடலுக்குள் ஊடுருவும் ஒளியை சத்தமில்லாமல் அறைக்குள் அனுமதிக்கிறது சன்னல்   எழுந்து அருகில் சென்றதும் எங்கிருந்தோ வந்த...

தேவதேவன் கவிதைகள்.

அமைதியான அந்தக் காலைநடையில் அவர் சென்றுகொண்டிருந்தார் எல்லாம் முடிந்துவிட்டது. இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல்!   இதுதான் இதுதான் அந்தச்செயல் என்பதுபோல்!   மிகச்சரியான பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிட்டவர்போல்!   அந்தக் காலையையும் அந்தப் பாதையையுமே தாண்டி அந்த நடைமட்டுமே ஆகிவிட்டவர்போல்! இவைபோலும்   எந்தச் சொற்களாலுமே தீண்ட முடியாதவர்போல்!   எங்கிருந்து வருகின்றன எங்கிருந்து வருகின்றன விளையாடும் குழந்தைகளின் இந்தப் பெருங்களிக் கீச்சிடல்கள்?   இப்பேரண்டத்தின் ஒத்திசைவிலிருந்துவரும் பேரிசையின்...

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்.

Bestseller வார்த்தை ஒரேயொரு மன்னிப்பானது உடனிருந்தால் போதும் எதிலிருந்தும் தப்பிவிடலாமென்கிற தைரியம் ஒருவகையில் அதுவும் உண்மைதான் மன்னிப்புகள் ஒருபோதும் தீர்ந்துபோகாதது மன்னிப்புகளால் ஒருபோதும் பழசாகவும் முடியாது வருடாவருடம் அதிகளவில் விற்றுத்தீர்கிற அவ்வார்த்தைக்குத்தான் சந்தையில் எப்போதும் மவுசு அதிகம் பிற்பாடு தன் தேவைகள் அதிகமாவதை உணர்ந்தபின்னர் பகிரங்கமாகவே...

ந.பெரியசாமி கவிதைகள்

பூனை விந்தி நடக்கிறது பூனை தவறுதலாக கால் ஒன்றை குறைச்சலாக்கி வரைந்துவிட்டேன்.   எங்களுக்குள் இயல்பாகியது அது முறைப்பதும் நான் மன்னிப்பு கேட்பதும்.   விரையும் வேறு பூனை பார்க்க அதன் கண்கள் நெருப்பாகிடும் அப்பொழுது கிண்ணத்தில் பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன்.   இன்று மறக்காமல் வரைபடத் தாள்களையும் எழுது உபகரணங்களையும் எதிர் இல்ல சிறுமிக்கு அன்பளிப்பாக்கினேன் மென்மையை ஏந்திக்கொண்டு பதுங்கிப்...

தூய வெண்மையின் பொருளின்மை

இலைகளற்றக் கிளைகளில் விளையாட யாருமற்ற கிரணங்கள், நிறங்களைத் துறந்து தியானித்து உக்கிர வெண்மையை ஓலமிடுகின்றன நிறங்களின் வெறுமையில் நிறையும் வெண்மையில் திசையெங்கும் பிரதிபலித்து மீண்டு வந்து சேரும் மேலும் சிறிதளவு வெண்மை. தனிமையின் விடமேறி நீலம்பாரித்து நிற்கும் வானம் மேகங்கள் அற்று மேலும் வெறுமை கூட நீலம் அடர்கிறது.. பனி பூத்து பனி கொழிக்கும் வனமெங்கும் தானே எதிரொளித்து சோம்பிக் கிடக்கும் தூய வெண்மையின் பொருளின்மையில், எப்படியாவது ஒரு...

நிலாகண்ணன் கவிதைகள்

அவளொரு வயலினிஸ்ட் பெண்மையின் பொருள்படும் நிழலும் அன்பு திரண்ட கனியுமாக தன்னை மூடிக்கொள்ளாத அம்மரம் எப்போதும் திறந்திருந்தது கன்னி மரியாவைப் போல அவளுடைய கண்களின் ஆழத்தில் எப்போதும் இரக்கத்தின் சொல் இருக்கும் அவள் ஒரு வயலினிஸ்ட் கிழிந்த ஆடைகளை சிறு...